ஹைட்ராக்ஸி குளோரோ குயின் மாத்திரைகளை வழங்கும் இந்தியா - பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்கும் டிரம்ப்

ஹைட்ராக்ஸி குளோரோ குயின் மாத்திரைகளை வழங்கும் இந்தியாவுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் நன்றி தெரிவித்துள்ளார்.
ஹைட்ராக்ஸி குளோரோ குயின் மாத்திரைகளை வழங்கும் இந்தியா -  பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்கும் டிரம்ப்
x
அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளா​ர்​. அதில், மிகவும் அசாதாரணமான ஒரு காலச் சூழ்நிலையில்,  இரண்டு நண்பர்களுக்கு இடையே, மிக நெருங்கிய ஒத்துழைப்பு அவசியமாகிறது என கூறியுள்ளார். ஹைட்ராக்ஸி குளோரோ குயின் மாத்திரை ஏற்றுமதி குறித்த முடிவுக்காக இந்தியாவுக்கும் இந்திய மக்களுக்கும் நன்றி செலுத்துவதாகவும் இந்தியாவின் உதவியை ஒருபோதும் மறக்க முடியாது எனவும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். மேலும், கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியாவுக்கு மட்டுமின்றி மனித குலத்துக்கே உதவும் வலிமையான தலைமையாக விளங்கும் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிப்பதாகவும் டிரம்ப் பதிவிட்டுள்ளார்.



Next Story

மேலும் செய்திகள்