வழிப்பறியில் வல்லரசு? - அமெரிக்கா மீது குற்றம் சாட்டி வரும் வளர்ந்த நாடுகள்

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் , வல்லரசு நாடான அமெரிக்கா வழிப்பறி போன்ற செயல்பாட்டில் ஈடுபட்டுள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...
வழிப்பறியில் வல்லரசு? - அமெரிக்கா மீது குற்றம் சாட்டி வரும் வளர்ந்த  நாடுகள்
x
கடந்த 2 நாட்களுக்கு முன்பு, இந்தியாவில் இருந்து மருந்துகள் வாங்குவது குறித்து, அமெரிக்க பத்திரிகையாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்... இதற்கு டிரம்பின் பதில் இந்தியாவுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் இருந்தது... 

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அமெரிக்கா பல்வேறு வளர்ந்த நாடுகளுடனும் இது போன்று சர்ச்சையை கிளப்பும் வகையில் செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன... 

கொரோனாவால் தற்போது அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடு அமெரிக்கா... 

4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 12 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்...

கொரோனாவின் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் அமெரிக்கா திணறி வருகிறது...  அங்கு முக கவசங்கள், பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது..

இந்நிலையில் வல்லரசு நாடானா அமெரிக்கா, நவீன திருட்டில் ஈடுபட்டு வருவதாக ஜெர்மனி, கனடா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன...

சீனாவில் இயங்கி வரும் "3 எம்" என்ற அமெரிக்க நிறுவனத்திடம் முக கவசங்களை  ஆர்டர் செய்திருந்தது ஜெர்மனி... அதன்படி அந்த நிறுவனம் விமானம் மூலம் முக கவசங்களை ஜெர்மனிக்கு அனுப்பி வைத்தது...

ஆனால் முக கவசங்கள் தங்களுக்கு வந்து சேரவில்லை என்றும், அமெரிக்கா அதனை பறித்து கொண்டதாகவும் ஜெர்மனி அரசு பரபரப்பு குற்றம் சாட்டி உள்ளது... 

இது குறித்து கருத்து தெரிவித்த, பெர்லின் உள்துறை அமைச்சர் ஆண்ட்ரியாஸ் கீசல், ஆர்டர் செய்த முக கவசங்கள் அனைத்தும் விமானம் மூலம் சீனாவில் இருந்து தாய்லாந்து வழியாக ஜெர்மனி கொண்டுவர முடிவு செய்யப்பட்டதாகவும், 

ஆனால் தாய்லாந்து தலைநகர் பாங்காங் விமான நிலையத்தில் அமெரிக்க அதிகாரிகள் அனைத்தையும் வழிபறி செய்து கொண்டனர் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்..

இது ஒரு நவீன திருட்டு என குறிப்பிட்ட ஆண்ட்ரியாஸ் கீசல், சர்வதேச வர்த்தக விதிகளை டிரம்ப் தலைமையிலான அமெரிக்க நிர்வாகம் பின்பற்றவில்லை என்று கண்டனம் தெரிவித்துள்ளார்..

இதேபோல், வேறு விதமான குற்றச்சாட்டை டிரம்ப் மீது சுமத்துகிறது கனடா அரசு...  

அமெரிக்க நிறுவனங்கள் தயாரிக்கும் மருத்துவ உபகரணங்களை, பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யக்கூடாது டிரம்ப் உத்தரவிட்டிருந்த நிலையில்,

இதற்கு பதிலளித்துள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, 

டிரம்ப் மிகப்பெரிய தவறை செய்து வருவதாக குற்றம் சாட்டிருக்கிறார்.. அங்கிருந்து பொருட்கள் வருவதை தடுத்தால், கனடாவில் இருந்து மருத்துவ பணிக்காக செல்பவர்களை தடுக்க நேரிடலாம் எனவும் மறைமுகமாக எச்சரித்துள்ளார்... 

இதேபோல், வல்லரசு நாடான பிரான்ஸும் அமெரிக்கா மீது குற்றம் சாட்டியுள்ளது... 


சீனாவில் இருந்து, தாங்கள் ஆர்டர் செய்த முக கவசங்களை கடைசி நிமிடத்தில், அதிக விலை கொடுத்து அமெரிக்கா வாங்கியதாக தெரிவித்துள்ளார், பிரான்சின் கிழக்கு பிராந்தியத்தின் தலைவர் ஜீன் ராட்னர்...

ஹாலிவுட் படங்களில் எப்போதும் உலகை காப்பாற்றும், வல்லரசு நாடுகளில் முதன்மையானது, அமெரிக்கா என்பது போன்று காட்சிகள் தான், பெரும்பாலும் வடிவமைக்கப்படும்.. 

ஆனால் தங்கள் நாட்டையே காப்பாற்ற முடியாத நிலை ஒருபக்கம், பிறநாடுகளுக்கு செல்லும் உதவிகளை தடுப்பது மறுபக்கம் என குழப்பி போயிருக்கும் அமெரிக்கா, ஒரு நகைப்புக்குரிய நாடாக மாறி வருகிறதோ என்ற கேள்வியை எழுப்பியுள்ளது... 


Next Story

மேலும் செய்திகள்