வானில் பிரகாசித்த இளஞ்சிவப்பு முழு நிலவு - வீட்டில் இருந்தபடி ரசித்த மக்கள்

இங்கிலாந்து, துருக்கி, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் இளஞ்சிவப்பு முழு நிலவு பிரகாசமாக காட்சி அளித்தது.
வானில் பிரகாசித்த இளஞ்சிவப்பு முழு நிலவு - வீட்டில் இருந்தபடி ரசித்த  மக்கள்
x
இங்கிலாந்து, துருக்கி, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில்
இளஞ்சிவப்பு முழு நிலவு பிரகாசமாக காட்சி அளித்தது. அதனை பொதுமக்கள் கண்டு ரசித்தனர். சிலர் அதனை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.நடப்பு ஆண்டின் மிகப்பெரிய, பிரகாசமான இளஞ்சிவப்பு முழு நிலவை உலகம் முழுவதும் உள்ள மக்கள்  கண்டு ரசித்தனர். பூமியை, 3 லட்சத்து 84 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் சுற்றி வரும் நிலவு, பூமிக்கு அருகாமையில் வரும்போது, அந்த நாள் பௌர்ணமியாக இருந்தால் சூப்பர் மூன் தெரியும் என்றும் கூறப்படுகிறது. பிங்க் மூன் என்று சொல்லப்பட்டாலும் தங்க நிறத்தில் ஜொலித்த இந்த நிலவு, வழக்கமான தோற்றத்தை விட 14 சதவீதம் பெரிதாகவும், 30 சதவீதம் பிரகாசமாகவும் தெரிந்தது என்று அறிவியல் அறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்