"கொரோனா போரில் நிச்சயம் வெல்வோம்" - ராணி எலிசபெத் உரை

கொரோனா போரில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என இங்கிலாந்து ராணி எலிசபெத், நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.
கொரோனா போரில் நிச்சயம் வெல்வோம் - ராணி எலிசபெத் உரை
x
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைர​ஸ் தாக்கம் இங்கிலாந்து இளவரசர் சார்லஸ், நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சனையும் விட்டு வைக்கவில்லை. இதனிடையே ராணி எலிசபெத், நாட்டு மக்களிடையே தொலைக்காட்சி வாயிலாக உரை நிகழ்த்தினார். அரிதான காலங்களில் மட்டுமே வெளியாகும் அரசியின் இந்த உரையில், கடுமையான சவாலை உலகம் எவ்வாறு எதிர்கொண்டு வெற்றி பெற்றது என்பதை நினைவுகூரும் ஆண்டாக 2020 அமையும் என கூறியுள்ளார்.  சவாலான இந்நேரத்தில் பணியாற்றும்  மருத்துவப் பணியாளர்களுக்கு அவர் பாராட்டு  தெரிவித்து உள்ளார். நிச்சயம் நல்ல நாட்கள் வரும் , நாம் நமது நண்பர்களை சந்திப்போம்,  குடும்பத்துடன் இணைவோம் என மக்களுக்கு ராணி எலிசபெத் தெரிவித்தார். 2ம் உலகப்போர் காலத்தில் மக்களுக்கு இருந்த ஊக்கம் தற்போது தேவைப்படுவதாகவும் ராணி எலிசபெத் கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்