நிதிச்சிக்கலில் டிரம்ப் குடும்ப நிறுவங்கள்...

கொரோனா அச்சுறுத்தலுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்-க்கு சொந்தமான தொழில் நிறுவனங்களும் தப்பவில்லை.
நிதிச்சிக்கலில் டிரம்ப் குடும்ப நிறுவங்கள்...
x
கொரோனா அச்சுறுத்தலுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்-க்கு சொந்தமான தொழில் நிறுவனங்களும் தப்பவில்லை. உலக பெரும் பணக்காரர்களில் ஒருவரான டிரம்பின் 2வது மகனும், தொழில் நிறுவனங்களை கவனித்து வருபவருமான எரிக் டிரம்ப் கடன்களை திரும்ப செலுத்த அவகாசம் கேட்டுள்ளார். கடன் வழங்கிய டட்ச் வங்கி (Deutsche Bank) கடன்களை திரும்ப வழங்க அவகாசம் வழங்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இதே போன்று டிரம்ப் குடும்பத்தினருக்கு சொந்தமான சுற்றுலா தொழில் நிறுவனங்களும் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளன. இதனால் பாம் பீச் கவுண்டி நிறுவனத்தின் சொத்துக்களுக்கான வாடகையை வழங்க கூடுதல் அவகாசம் வழங்குமாறும் டிரம்ப்-க்கு சொந்தமான நிறுவனங்கள் கேட்டுக்கொண்டுள்ளன. 

Next Story

மேலும் செய்திகள்