கொரோனா - வல்லரசு அமெரிக்கா தோல்வியா? முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தாமதமா?

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அமெரிக்கா மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளது. இந்நிலையில் இதற்கான காரணம் குறித்து பல அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொரோனா - வல்லரசு அமெரிக்கா தோல்வியா? முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தாமதமா?
x
மிகப்பெரும் மருத்துவ வல்லுநர்கள், ஆராய்ச்சியாளர்கள், கண்டுபிடிப்பாளர்கள் ....

இப்படி உலக நாடுகளுக்கு முன்னுதாரணமாக உள்ளது அமெரிக்கா. ஆனால் கொரோனா குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளது என்றே கூறலாம்.  

அமெரிக்காவில் கொரேனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை கடந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்தை தாண்டியுள்ளது. 

கொரோனா விவகாரத்தில் இப்படி மிகப்பெரும் தோல்வியைக் கண்டுள்ள அமெரிக்காவிலிருந்து இது குறித்த பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.  

அதில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தாமதாக எடுத்தததே தோல்விக்கு காரணம் என்று முதற்கட்டமாக தெரியவந்துள்ளது. 

ஜனவரி மாதம் 2 வது வார கடைசியிலேயே அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும், ஜனவரி மாத இறுதியில் தான் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் பரிசோதனையை அந்நாடு தொடங்கியதாகவும் கூறப்படுகிறது.


அதுமட்டுமின்றி அமெரிக்க அரசு கொரோனா குறித்த பரிசோதனைகளை மேற்கொள்ள 3 தனியார் அமைப்புகளை நிறுவியுள்ளது. 

அந்த அமைப்புகள் நிலைமையின் விபரீதத்தை உணர்ந்து கொள்ளாமல், பரிசோதனைகளை பிப்ரவரியில் தான் துவக்கியுள்ளது. 

மேலும் அதன் முடிவுகள் ஒரு வாரகாலத்திற்கு பிறகு தாமதமாக வெளியானதும்  தோல்விக்கு ஒரு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.    


மார்ச் மாத துவக்கத்தில்தான் சமூக விலகலையே அமெரிக்கா அரசு கடை பிடித்துள்ளது. 

இதுஒரு புறமிருக்க, வெள்ளை மாளிகையின் செய்தித்தொடர்பாளரே, அதிபர் மீது குற்றம் சாட்டியுள்ளார். 

நிலைமையின் தீவிரத்தை ட்ரம்ப் புரிந்து கொள்ளவில்லை என அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இந்நிலையில் அமெரிக்காவின் தொற்று நோய் ஆராய்ச்சி கழகம்,  அமெரிக்காவின் இறப்பு எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டும்  என  அதிர்ச்சி தகவலையும் வெளியிட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்