ரஷிய அதிபர் புதினுக்கு கொரோனா பாதிப்பா?: கை குலுக்கிய மருத்துவருக்கு கொரோனா தொற்று

ரஷிய தலைநகர் மாஸ்கோவில் கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவமனைக்கு, அதிபர் புதின் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
ரஷிய அதிபர் புதினுக்கு கொரோனா பாதிப்பா?: கை குலுக்கிய மருத்துவருக்கு கொரோனா தொற்று
x
ரஷிய தலைநகர் மாஸ்கோவில் கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவமனைக்கு, அதிபர் புதின் நேரில் சென்று ஆய்வு செய்தார். முகக் கவசம், கையுறைகள் என எந்த பாதுகாப்பு அம்சங்களும் இல்லாமல் அதிபர் புதின் ஆய்வு செய்தார். இந்நிலையில், அதிபர் புதினுடன் நெருக்கமாக இருந்த மருத்துவருக்கு, தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அதிபர் புதினுக்கும்  கொரோனா தாக்குதல் இருக்குமோ என்ற அச்சம் எழுந்தது. ஆனால் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டு விட்டதாக அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்