வைரஸ் தாக்கம் கிராமப்புறங்களில் அதிகரிக்க வாய்ப்பு - உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி தகவல்

கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவின் கிராமப்புறங்களில் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி செளமியா சுவாமிநாதன் அச்சம் தெரிவித்துள்ளார்.
வைரஸ் தாக்கம் கிராமப்புறங்களில் அதிகரிக்க வாய்ப்பு - உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி தகவல்
x
இந்தியாவில், பல லட்சம் மக்கள் நகரங்களில் இருந்து  கிராமங்களுக்கு திரும்பிச் சென்றுள்ளதால், அரசு உடனடியாக கிராமப்புறங்களில் மருத்துவ பரிசோதனைகளை தொடங்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பின்  தலைமை விஞ்ஞானி செளமியா சுவாமிநாதன் வலியுறுத்தி உள்ளார். ஊரடங்கு உத்தரவு இருந்தாலும், மருத்துவ சோதனைகளை மேற்கொள்வது, அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பது என பல வழிகளிலும் போராட்டத்தினை தொடர வேண்டும் என கூறியுள்ளார். இந்த சூழலில் கிராமப்புற சுகாதார கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் என்றும், குறுகிய கால திட்டம், நீண்ட கால திட்டம் என்கிற அடிப்படையில் தொடர்ச்சியாக செயல்பட வேண்டும் என்றும் செளமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.



Next Story

மேலும் செய்திகள்