பசி, பட்டினியால் தவித்த குரங்குகள் - கருணைக்கரம் நீட்டும் தாய்லாந்து மக்கள்

கொரோனா மனிதர்களை மட்டுமல்ல, குரங்குகளையும் பாதித்திருக்கிறது.
பசி, பட்டினியால் தவித்த குரங்குகள் - கருணைக்கரம் நீட்டும் தாய்லாந்து மக்கள்
x
மனுஷங்கதான் சாலை மறியல் பண்றதையும் நடு ரோட்டுல சண்டை போட்டு ரவுடித்தனம் காட்டுறதையும் பார்த்திருப்போம். ஆனா தாய்லாந்துல மங்கிகள் இப்ப அதை பண்ணிட்டிருக்கு.

* இதுக்கு காரணம் கொரோனாதான். ஆமாங்க, தாய்லாந்து ஒரு சுற்றுலா தேசம். கூட்டம் கூட்டமா இங்க வர்ற சுற்றுலா பயணிகள் கிட்ட உரிமையா வாங்கி சாப்பிட்டே இந்த ஊர்ல பெரிய குரங்குக் கூட்டம் உருவாகிப் போச்சு. ஆனா, இப்ப கொரோனா பயத்தால சுற்றுலா சுருங்கிப் போச்சு. தாய்லாந்து தெருவெல்லாம் வெறிச்சோடிக் கிடக்குது. அதனால பசி பட்டினியில என்ன பண்றதுன்னே தெரியாம குரங்குக் கூட்டம் ரொம்ப மூர்க்கமா மாறிடுச்சு. குரங்குகள் ரவுடித்தனம் பண்ற இந்த வீடியோ, உலகம் முழுக்க பரவினதுனால தாய்லாந்துல வசிக்கிற லோக்கல் மக்கள் விழிச்சிக்கிட்டாங்க. நம்ம ஊர் குரங்குகளை நாமதான் பாதுகாக்கணும்னு முடிவெடுத்த இவங்க ஒவ்வொருத்தரும், அவங்களால முடிஞ்ச அளவுக்கு சாப்பாடு வாங்கி குரங்குகளுக்குக் கொடுக்க ஆரம்பிச்சிருக்காங்க. 

Next Story

மேலும் செய்திகள்