சீனாவை மிஞ்சியது அமெரிக்காவின் கொரோனா பாதிப்பு : சீனாவுடன் கைகோர்க்கிறது அமெரிக்கா

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவது குறித்து சீன அதிபர் ஷி ஜின்பிங்கை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆலோசனை நடத்தியுள்ளார்.
சீனாவை மிஞ்சியது அமெரிக்காவின் கொரோனா பாதிப்பு :  சீனாவுடன் கைகோர்க்கிறது அமெரிக்கா
x
அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85 ஆயிரத்தை கடந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனாவை சீன வைரஸ் என அதிபர் டிரம்ப் விமர்சித்து வந்தது, சீனர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், கொரோனா கண்டறியப்பட்டுள்ள சீனாவில் அந்த வைரஸ் பரவல் கிட்டத்தட்ட முழுமையாக  கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனை அடுத்து, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சீன அதிபர் ஜின்பிங்கிடம் அதிபர் டிரம்ப் கேட்டறிந்துள்ளார். சீனாவை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வரை கடுமையாக விமர்சித்து வந்த டிரம்ப், கொரோனாவை கட்டுப்படுத்த சீனாவுடன் கைகோர்த்திருப்பது, வரவேற்பை பெற்றுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்