"கொரோனா பரவல் விரைவில் குறையும்" - நோபல் பரிசு பெற்ற உயிர் இயற்பியல் விஞ்ஞானி மைக்கேல் லேவிட் நம்பிக்கை

கொரோனா நோய்த்தொற்று விரைவில் முடிவுக்கு வரும் என, நோபால் பரிசு பெற்ற உயிர் இயற்பியல் விஞ்ஞானி மைக்கேல் லேவிட், நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவல் விரைவில் குறையும் - நோபல் பரிசு பெற்ற உயிர் இயற்பியல் விஞ்ஞானி மைக்கேல் லேவிட் நம்பிக்கை
x
கொரோனா நோய்த்தொற்று, உலகத்தையே அச்சுறுத்தி வரும் நிலையில், மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர். இந்த நிலையில், இந்த நோய்த்தொற்று, விரைவில் முடிவுக்கு வரும் என,சீனாவின் நிலையை கணித்த நோபால் பரிசு பெற்ற உயிர் இயற்பியல் விஞ்ஞானி மைக்கேல் லேவிட் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். 

* சீனாவில், கொரோனா நோய்த்தொற்று லட்சக்கணக்கானோரை பாதிக்கும் என பல வல்லுநர்கள் கணித்தபோது, மைக்கேல் லேவிட், மிகத்துல்லியமாக தனது கணிப்பை வெளியிட்டிருந்தார்.

* அதில் சீனாவில் 80 ஆயிரம் பேர் மட்டும் நோய்த்தொற்றுக்கு ஆளாவார்கள் எனவும், அதில் 3250 பேர் வரை மட்டுமே உயிரிழக்க கூடும் என கணித்திருந்தார்.

* இதை மெய்ப்பிக்கும் வகையில் சீனாவில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 81 ஆயிரத்து 171 ஆகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3277 ஆகவும் இருந்தன

* இதனிடையே, லாஸ் ஏஞ்சல்ஸ் நாளேட்டுக்கு  அவர் அளித்த பேட்டியில் கொரோனா நோய்த்தொற்று படிபடியாக குறையும் என கூறியுள்ளார்.

* 78 நாடுகளில் நாள் தோறும் 50 பேருக்கு நோய்தொற்று ஏற்படுவதாக அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

* இத்தாலியில் கொரோனா நோய்த்தொற்று வேகமாக பரவியதற்கு, அந்த நாட்டில் நிலவும் தடுப்பூசிக்கு எதிரான மனநிலையே மிக முக்கிய காரணம் என தெரிவித்துள்ளார்.

* சளி, காய்ச்சல் ஏற்பட்ட பலருக்கு  கொரோனா சோதனை செய்ய முடியாமல் போனதாலேயே உயிரிழப்புகள் அதிகரித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

* சர்வதேச அளவில் தற்போது சீனா கையாண்ட மக்களை தனிமைப்படுத்தும் முறை கையாளப்படுவதால்,பெருமளவில் நோய்த்தொற்று ஏற்படாமல் தடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

* கொரோனா வைரஸ் புதிதாக உருவான வைரஸ் என்பதால், அதற்கு மருந்து கண்டறிவதில் தாமதம் ஏற்படுவதாகவும், எல்லாம் விரைவில் சரியாகி விடும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்

* இந்த கொரோனா, லட்சக்கணக்கானோரை பலி கொல்லாது என கணித்துள்ள நோபல் பரிசு பெற்ற விஞ்ஞான் மைக்கேல் லேவிட், நோய்த்தொற்று விரைவில் முடிவுக்கு வரும் எனவும் நம்பிக்கை ஒளியை பாய்ச்சியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்