'ஹண்டா வைரஸ் : மக்கள் அச்சப்பட தேவையில்லை'' - அமெரிக்க நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் தகவல்

உலகையே அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது கொரோனா வைரஸ். இதிலிருந்து மீள முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில் சீனாவில் ஹண்டா வைரஸ் என்ற நோய் உருவாகியுள்ளது.
ஹண்டா வைரஸ் : மக்கள் அச்சப்பட தேவையில்லை - அமெரிக்க நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் தகவல்
x
கொரோனா... உலகத்தையே முடக்கி, அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது... இறந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை நெருங்கியது ... 
தகுந்த மருத்துவம் இல்லாமல் செய்வதறியாது தவிக்கும் நிலை... இப்படி கொரோனாவின் கோரத்தாண்டவம் உலகின் மூலை முடுக்குகளிலெல்லாம் எதிரொலித்து கொண்டிருக்கிறது. 

இந்நிலையில் சீனாவில் புதிதாக முளைத்துள்ள ஹண்டா வைரஸ் மக்களுக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள சேன்டாங் மாகாணத்தைச் சேர்ந்த ஒருவர் இந்த ஹண்டா வைரஸினால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளார். அவருடன் பேருந்தில் பயணம் செய்த 32 பேருக்கும் நோய் தொற்று ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து இரத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.  

* ஹண்டா வைரஸ் எலிகள் மூலம் மட்டுமே அதிகளவு பரவக்கூடியது. இருந்தபோதிலும் மனிதர்கள் மூலம் பரவ அரிதாக வாய்ப்பு உள்ளது. இதனால் மனிதர்கள் பயப்படத் தேவையில்லை.ஹண்டா வைரஸ்  கொரோனாவைப்போல் வேகமாக பரவாது, இதுவரை ஒருவர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளார். எலிகளின் சிறுநீர், உமிழ் நீர் மூலம் இந்த நோய் பரவுகிறது. எலி கடித்தாலும் இத்தகைய நோய் பரவக்கூடும் என்று ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. 

* இந்த நோய் ஏற்பட்டவர்களுக்கு மிக அதிக அளவில் காய்ச்சல், உடல்வலி, சோர்வு, தலை சுற்றல் ஏற்படும். கொரோனாவை விட சற்று வீரியமானது இந்த ஹண்டா வைரஸ் என்பதே உண்மை. 

* இருந்தபோதிலும் கடந்த சில வருடங்களுக்கு முன்னர், சிலி மற்றும் அர்ஜெண்டைனாவில் ஹண்டா வைரஸ் பாதிக்கப்பட்ட மனிதர்களிடம் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தவர்களுக்கு ஏன்டேஸ் என்ற வைரஸ் பரவியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. 

1950 களில் கொரிய போரின் போது இந்த நோய் பரவலாக காணப்பட்டு ஒரு லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர்.  

மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு பரவக்கூடியது கொரோனா வைரஸ்..

தும்மும் போதும் இருமும் போதும் நீர்துளிகள் மனிதர் மீது படும் போது இத்தகைய நோய் பரவுகிறது. பாதிக்கப்பட்ட மனிதர்களிடமோ அல்லது பகுதிகளிலோ மனிதர்களின் தொடர்பு சிறிதளவு இருந்தால் கூட இந்த வைரஸ் எளிதில் பரவக் கூடும். 

இந்த நோய் தாக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல்,சளி ,மூச்சுவிடுவதில் சிரமம் ஆகியவை ஏற்படுகிறது. 

இதுவரை 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இதனால் கொரோனா வைரஸிம் ஹண்டா வைரஸூம் முற்றிலும் வேறுபட்ட தன்மையில் உள்ளது.  


Next Story

மேலும் செய்திகள்