பணத்தின் மூலம் பரவுமா கொரோனா ? - மருத்துவமனைகளில் பெற்ற பணத்தை தீயிட்டு கொளுத்திய சீனா

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக, எங்கும் கொரோனா எதிலும் கொரோனா என்கிற அச்சம் உருவாகியுள்ள நிலையில், பணத்தின் மூலம் பரவுமா என்கிற அச்சமும் மக்களிடம் ஏற்பட்டுள்ளது.
பணத்தின் மூலம் பரவுமா கொரோனா ? - மருத்துவமனைகளில் பெற்ற பணத்தை தீயிட்டு கொளுத்திய சீனா
x
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக, எங்கும் கொரோனா எதிலும் கொரோனா என்கிற அச்சம் உருவாகியுள்ள நிலையில், பணத்தின் மூலம் பரவுமா என்கிற அச்சமும் மக்களிடம் ஏற்பட்டுள்ளது.. அது பற்றி அலசுகிறது இந்த தொகுப்பு. கொரோனா கிருமி பரவுவதை தடுக்க, நோயாளி தொட்ட மேற்பரப்புகளை சுத்தம் செய்வது மற்றும் கிருமி நீக்கம் செய்வது ஆகியவை முக்கிய பங்கு வகிப்பதாக உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தி உள்ளது. கொரோனா தொடர்பாக ஆய்வுகளில், அவை முறையாக கிருமி நீக்கம் செய்யப்படாவிட்டால், உலோகம், கண்ணாடி மற்றும் பிளாஸ்டிக் ஆகியவற்றில் 9 நாட்கள் வரை உயிர்வாழும் என கண்டறியப்பட்டது.  காகித அட்டைகளில் 24  மணி நேரம் உயிர்வாழும் என்றும் கூறப்படுகிறது.  இப்படியான நிலையில், எந்த பொருட்களின் மேற்பரப்புகளை தொடுவதற்கும் பயம் உள்ளதால்,  பணம் மூலம் கொரோனா பரவுமா என்கிற அச்சமும் ஏற்பட்டுள்ளது.

கொரோனா அதிகம் தாக்கத்தை ஏற்படுத்திய ஈரானில், ரொக்கப்பணம் பயன்படுத்துவதை குறைத்துக் கொள்ள வேண்டும் என அந்த நாடு வலியுறுத்தி உள்ளது.  பிட்காயின் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கப்பதாகவும் அந்த நாடு தெரிவித்துள்ளது. கொரோனா தாக்கத்துக்கு பின், சீனாவில் சுமார் 6 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான் பணம் புதிதாக  மாற்றிக் கொடுக்கப்பட்டுள்ளது. வுகான் மாகாணத்தில் சந்தைகள், பேருந்துகள், மருத்துவமனைகளில் பெறப்பட்ட பணத்தை சீன மத்திய வங்கி தீயிட்டு அழித்துள்ளதாக கூறப்படுகிறது. பிற இடங்களில் பெறப்பட்ட பணத்தை அதிக வெப்ப நிலையில்14 நாட்கள் காய வைத்து அதன் பின்னர் பயன்பாட்டுக்கு கொண்டு வரவும் சீனா திட்டமிட்டுள்ளது.
  
அமெரிக்காவில் பல இடங்களில் வர்த்தக நிறுவனங்கள் தற்போது டாலர் நோட்டுகளை வாங்குவதை தவிர்த்து வருவதாக கூறப்படுகிறது. ஏற்கெனவே மின்னணு பரிவர்த்தனை அதிகம்கொண்ட நாடு என்பதால், டாலர் நோட்டை தவிர்ப்பவர்களுக்கு சலுகைகளையும் வர்த்தக நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

ரொக்க பணத்தால் நேரடியாக வைரஸ் பரவும் என்பது குறித்து ஆய்வுகளில் தெரியவில்லை என்றாலும், மக்கள் எச்சரிக்கையுடன் இருப்பதை பல நாட்டு அனுபவங்கள் உணர்த்துகின்றன. ரூபாய் நோட்டுகளை பயன்படுத்துவது குறித்து எச்சரிக்கையுடன் இருந்தாலும், இந்த சூழலில் மின்னணு பரிவர்த்தனைகளை பயன்படுத்தி நெருக்கடியில் இருந்து மீளலாம் என்றே பலரும் தெரிவிக்கின்றனர்


Next Story

மேலும் செய்திகள்