பணத்தின் மூலம் பரவுமா கொரோனா ? - மருத்துவமனைகளில் பெற்ற பணத்தை தீயிட்டு கொளுத்திய சீனா
பதிவு : மார்ச் 20, 2020, 03:41 PM
கொரோனா அச்சம் காரணமாக மக்கள் வீடுகளில் முடங்கியுள்ள நிலையில், பணத்தின் மூலம் பரவுமா என்கிற அச்சமும் மக்களிடம் எழுந்துள்ளது.
உலோகம், கண்ணாடி மற்றும் பிளாஸ்டிக் ஆகியவற்றில் கொரோனா கிருமிகள் 9 நாட்கள் வரை உயிர்வாழும் என கண்டறியப்பட்டதுடன், 
காகித அட்டைகளில் 24  மணி நேரம் உயிர்வாழும் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில், ரூபாய் நோட்டுகளை பயன்படுத்துவதில் மக்களிடம் அச்சம் ஏற்பட்டுள்ளது. கொரோனா தாக்கத்துக்கு பின் சீனாவில் சுமார் 6 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ரொக்கப்பணம் புதிதாக மாற்றி கொடுக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைகள், கடைகளில் பெறப்பட்ட நோட்டுகளை சீன வங்கி தீயிட்டு எரித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிய வந்துள்ளன. ஈரானில், காகித பண பயன்பாட்டை குறைத்துக் கொள்ள மக்களுக்கு அந்த நாடு அறிவித்துள்ளது. அமெரிக்காவில் தற்போது பல நகரங்களில் டாலர் நோட்டுகள் பெறுவதை வர்த்தக நிறுவனங்கள் தவிர்த்துவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், ரூபாய் நோட்டுகள் பயன்படுத்துவதற்கு மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ரிசர்வ் வங்கி உத்தரவை பின்பற்றாத வங்கிகள்

வங்கிக் கடன்கள் செலுத்துவதற்கு ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள சலுகைகளை பல்வேறு வங்கிகளும் முறையாக நிறைவேற்றவில்லை என புகார் எழுந்துள்ளது.

51 views

கொரோனா நிவாரண தொகை : வீடு வீடாக சென்ற வழங்கிய ஊழியர்கள்

நெல்லை மேலப்பாளையம் பகுதியில், நியாயவிலை கடை ஊழியர்கள் வீடு வீடாக சென்று ரேஷன் பொருட்கள் வழங்கினர்.

18 views

பிற செய்திகள்

"அகல் விளக்கு ஏற்றுவதால் கொரோனாவை தடுக்க முடியுமா?, பிரதமர் மோடி விளக்க வேண்டும்" - சுப்பராயன் எம்.பி.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அதிமுக மற்றும் பாஜகவினர் அரசியல் விளம்பரம் செய்வதாக திருப்பூர் எம்.பி சுப்பராயன் குற்றம்சாட்டி உள்ளார்.

9 views

கொரோனா வார்டில் என்ன மெனு?

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு வழங்கப்படும் உணவு விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

7 views

நிதிச்சிக்கலில் டிரம்ப் குடும்ப நிறுவங்கள்...

கொரோனா அச்சுறுத்தலுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்-க்கு சொந்தமான தொழில் நிறுவனங்களும் தப்பவில்லை.

9 views

ஆசிரியர் வெளியிட்ட கொரோனா விழிப்புணர்வு பாடல்

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள கோவிலங்குளத்தை சேர்ந்த ஆசிரியர் இருளாண்டி, விழிப்புணர்வு பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

9 views

மகாராஷ்டிராவில் தவித்து வரும் தமிழக மாணவர்கள்- குடிக்க தண்ணீர் கூட கிடைக்கவில்லை என கண்ணீர்

மகாராஷ்டிர மாநிலம் ஹிங்கோலியில் தங்கி படித்து வரும் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியை சேர்ந்த 25-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஊரடங்கு உத்தரவு காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டதால் சொந்த ஊருக்கு வரமுடியாமல் தவித்து வருகின்றனர்

9 views

போலீசார் மீது கல்வீசி தாக்குதல் - கூட்டமாக தொழுகை நடத்த அனுமதிக்காததால் ஆத்திரம்

கர்நாடகா மாநிலம் ஹூப்ளியில் கூட்டமாக தொழுகை நடத்துவதை தடுத்த போலீசார் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டது.

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.