நாடு முழுவதும் மக்கள் ஊரடங்குக்கு அழைப்பு விடுத்த மோடி - கொரோனாவை வெல்லுமா இந்தியா?
பதிவு : மார்ச் 20, 2020, 03:20 PM
சீனாவில், கொரோனாவின் தாக்கம் முற்றிலும் குறைந்து விட்ட நிலையில், இத்தாலியில் அதன் தாக்கம் அதிரித்துள்ளது. இதற்கான காரணம் என்ன
சீனாவில் கடந்த டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் துவக்கிய ஆட்டம் உலகில் எந்த நாடையும் தற்போது விட்டு வைக்கவில்லை. 

விரைவாக பரவிய புதிய ரக கொரோனா வைரஸால்,  சீனர்கள் ஓர் அசாதாரண நிலையை அனுபவித்தார்கள்.

கொரோனா தொற்றை, தனிமைப்படுத்தும் விதமாக கடந்த ஜனவரி மாதம் 23 ஆம் தேதி, வூகான் நகரை மூட சீன அரசு உத்தரவிட்டது. 

நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த மக்கள் தாங்களாகவே, வீட்டில் தங்கினர். வெளியே போக வேண்டிய நிலையில் முகக்கவசம் அணிந்து சென்றனர். சுகாதார நடைமுறைகளை அரசுடன் இணைந்து மக்கள் முழுமையாக கடைபிடித்தனர்.

மக்கள் கூட்டத்தை தவிர்ப்பதால் வைரஸ் தொற்றும் வாய்ப்பு குறையும் என மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

ஒவ்வொரு தெருவுக்கு ஒரு நிர்வாக
அலுவலகம் அமைக்கப்பட்டது. அதன் கீழே, ஒரு குழு அமைக்கப்பட்டு, வைரஸ் தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 

நாள்தோறும் குடியிருப்பு பகுதியில் மூன்று முறை கிருமிகளை அழிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். 

ஒருவருக்கு கொரோனா அறிகுறி தென்பட்டாலே, அவரை வீட்டிலேயே தனிமைப்படுத்தினர்.

மக்கள் எல்லோரும் அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்ஙகி வீட்டிலேயே தங்கினர்.

சீன அரசு எடுத்த நடவடிக்கைகளால் நோய் தொற்று கொண்டோரின் எண்ணிக்கை மார்ச் 10க்கு பின் தற்போது வெகுவாக குறைந்து விட்டது.

கோவிட் - 19 எனும் கொரோனா வைரஸ், பரவலை, கட்டுப்படுத்த இத்தாலி அரசு மேற்கொண்ட முயற்சிகளை, அந்நாட்டு மக்கள் அலட்சியம் காட்டியதாக கூறப்படுகிறது. இதனால், அங்கு உயிரிழப்பு சீனாவையே மிஞ்சியுள்ளது. 

இதனிடையே, சீனா வழியில் தற்போது இந்தியாவும் கொாரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது. 

இது குறித்து நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, வருகிற ஞாயிறன்று, காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை, மக்கள் சுய ஊரடங்கை கடைபிடிக்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பொதுமக்கள் சமூக நிகழ்வுகளில் பங்கெடுக்காமல், தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. 

இதன் மூலம், கொரோனா வைரசை, பரவுவதை வெகுவாக கட்டுக்குள் கொண்டு வர முடியும் என்பதே நம் இந்திய அரசின் நம்பிக்கையாக உள்ளது. 

நாடு நலம் பெற அரசின் வேண்டுகோளுக்கு செவி கொடுக்க வேண்டியது நம் அனைவரது கடமையாகும்.


தொடர்புடைய செய்திகள்

ரிசர்வ் வங்கி உத்தரவை பின்பற்றாத வங்கிகள்

வங்கிக் கடன்கள் செலுத்துவதற்கு ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள சலுகைகளை பல்வேறு வங்கிகளும் முறையாக நிறைவேற்றவில்லை என புகார் எழுந்துள்ளது.

63 views

கொரோனா நிவாரண தொகை : வீடு வீடாக சென்ற வழங்கிய ஊழியர்கள்

நெல்லை மேலப்பாளையம் பகுதியில், நியாயவிலை கடை ஊழியர்கள் வீடு வீடாக சென்று ரேஷன் பொருட்கள் வழங்கினர்.

18 views

பிற செய்திகள்

கடந்த 24 மணி நேரமாக நீடித்த துப்பாக்கிச் சண்டை : காஷ்மீரில் 9 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

காஷ்மீரின் பத்புரா பகுதியில் இந்திய எல்லைக்குள் அத்து மீறி நுழைய முயன்ற 9 தீவிரவாதிகள் சுட்டுக்கொலைப்பட்டனர்.

23 views

"கொரோனா வைரஸ் காற்றில் பரவுகிறது என்பதற்கு ஆதாரம் இல்லை" - மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்

கொரோனா வைரஸ் காற்றில் பரவுகிறது என்பதற்கு இதுவரை எந்த ஆதாரமும் இல்லை என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

31 views

ஏப்.8ல் நாடாளுமன்ற கட்சிகள் கூட்டம் : "தி.மு.க சார்பில் டி.ஆர்.பாலு பங்கேற்பார்" - பிரதமரிடம் தி.மு.க தலைவர் ஸ்டாலின் பேச்சு

டெல்லியில் வருகிற 8ஆம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்ற கட்சிகள் கூட்டத்தில், தி.மு.க சார்பில் டி.ஆர்.பாலு பங்கேற்பார் என பிரதமர் மோடியிடம் தி.மு.க தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

149 views

பிரதமர் மோடி தலைமையில் 8-ம் தேதி அனைத்து கட்சி கூட்டம் : அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்க முதலமைச்சருக்கு அழைப்பு

பிரதமர் மோடி தமிழக முதலமைச்சர் எடப்பாடியை தொலைபேசயில் தொடர் கொண்டு அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்தார்.

97 views

கொரோனா வைரஸ் எதிர்ப்பு போர் : டெல்லி இல்லத்தில் ஒளிவிளக்கை ஏற்றிவைத்த பிரதமர் மோடி

பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று நாடு முழுவதும் மின்விளக்குகளை அணைத்து பொதுமக்கள் தீபம் ஏற்றி ஒற்றுமையை வெளிப்படுத்தினர்.

26 views

கொரோனா குறித்த விழிப்புணர்வு பாடல் : சிஆர்பிஎஃப் வீரர்கள் இசையில் உருவானது

கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்திலும், சோர்வடைந்த மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதத்திலும் சிஆர்பிஎஃப் வீரர்களின் இசைக்குழு பாடல் ஒன்றை உருவாக்கியுள்ளது.

20 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.