சீனாவுக்கு வெளியே புதிதாக 21,114 பேருக்கு கொரோனா பாதிப்பு - உலக சுகாதார அமைப்பு தகவல்
சீனாவுக்கு வெளியே புதிதாக 21 ஆயிரம் பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது
சீனாவின் வூஹான் நகரில் கொரோனா வைரஸால் பாதிப்பு ஏற்பட்டு, உலகத்தின் பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது. மக்களை பெரும் அச்சத்தில் கொரோனா ஆழ்த்திய நிலையில், அதன் தாக்கம் குறித்து உலக சுகாதார அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 ஆயிரத்து 735 அதிகரித்து ஒரு லட்சத்து ஆயிரத்து 927 ஆக உயர்ந்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவுக்கு வெளியே, கொரோனா வைரஸால் மேலும் 78 பேர் உயிரிழந்தனர். தென் கொரியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7 ஆயிரத்து 313 ஆக உயர்ந்துள்ளது. ஜப்பானில் 463 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸின் சீற்றத்தால் ஈரான் நாட்டில் 6 ஆயிரத்து 566 பேர் பாதிக்கப்பட்டனர். இதுவரை 194 பேர் இறந்துள்ளனர். இத்தாலியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 ஆயிரத்து 883 ஆக அதிகரித்த நிலையில், இதுவரை அங்கு 233 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 93 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் 3 ஆயிரத்து 633 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால், மொத்தம் 21 ஆயிரத்து 114 பேராக அதிகரித்துள்ளது. சீனாவை தவிர மற்ற நாடுகளில் தென் கொரியா, ஜப்பான், ஈரான் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள் கொரோனா வைரஸால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.
Next Story

