நாளை இந்தியா வருகிறார் அமெரிக்க அதிபர் டிரம்ப் - 25ஆம் தேதி டெல்லியில் மோடியுடன் பேச்சு

இரண்டு நாள் பயணமாக நாளை இந்தியா வருகிறார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்.
நாளை இந்தியா வருகிறார் அமெரிக்க அதிபர் டிரம்ப் - 25ஆம் தேதி டெல்லியில் மோடியுடன் பேச்சு
x
குஜராத் மாநிலம், அகமதாபாத் விமான நிலையத்தில் வந்து இறங்கும் டிரம்ப்,  22 கிலோ மீட்டர் தூரம் சாலை வழியே பயணிக்க உள்ளார்.  முதலில், பிரதமர் மோடியுடன் , சபர்மதி ஆசிரமத்தை பார்வையிடும் டிரம்ப், உலகின் மிகப் பெரிய, ஒரு லட்சத்து 10 ஆயிரம் பேர் அமரக்கூடிய மொடேரா கிரிக்கெட் அரங்கத்தை திறந்து வைக்க உள்ளார். பின்னர் அங்கு ஆயிரக்கணக்கானோர் முன்னிலையில் நடைபெறும் வணக்கம் டிரம்ப் நிகழ்ச்சியில் இரு நாட்டு தலைவர்களும், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உரை நிகழ்த்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மோடி, டிரம்ப் சந்திப்பின்போது, வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட குறைந்த வாய்ப்பே உள்ளதாக கூறும் பொருளாதார நிபுணர்கள், பாதுகாப்பு மற்றும் வணிக ஒப்பந்தங்கள் சில கையெழுத்தாகலாம் என்றும் கூறுகின்றனர்.
எனினும்,  டிரம்ப்பின் இந்திய வருகை, இந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன்பு, இரு நாடுகளிடையே உருவாக உள்ள ஒரு புதிய உறவின் தொடக்கப்புள்ளியாக இருக்கும் என்று கருதப்படுகிறது


Next Story

மேலும் செய்திகள்