கட், காபி, பேஸ்ட் கட்டளைகளை கண்டுபிடித்த கணினி ஆராய்ச்சியாளர் லாரி டெஸ்லர் மறைவு

கம்ப்யூட்டர் பயன்படுத்துவதை எளிமையாக்கும் முக்கிய கட்டளைகளின் ஒன்றான கட், காபி, பேஸ்ட் வசதியை கண்டுபிடித்த லாரி டெஸ்லர் தனது 74 வது வயதில் மறைந்தார்.
கட், காபி, பேஸ்ட் கட்டளைகளை கண்டுபிடித்த கணினி ஆராய்ச்சியாளர் லாரி டெஸ்லர் மறைவு
x
லாரி டெஸ்லர் (Larry Tesler) என்றால் உடனடியாக அறியப்படாதவராக இருக்கலாம். ஆனால் கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர் என்றால், அவரது கண்டுபிடிப்பைப் பயன்படுத்தாமல் இருக்க முடியாது. 

கம்ப்யூட்டர், லேப்டாப், ஸ்மார்ட்போன், டேப்லெட் உள்ளிட்ட    சாதனங்களில் கண்ட்ரோல் சி (Ctrl+C) மற்றும் கண்ட்ரோல் வி (Ctrl+V) ஆகிய கட்டளைகள் பயன்படுத்துவதை தவிர்க்க முடியாது.

கம்ப்யூட்டர் பயன்படுத்துவதை எளிமையாக்கும் இந்த கட்டளைகளை கண்டுபிடித்த மென்பொருள் பொறியாளர்தான் லாரி டெஸ்லர்.

ஜெராக்ஸ் நிறுவனத்தில் பணியாற்றிய சமயத்தில், வேலையை எளிமையாகச் செய்ய கண்டுபிடித்ததுதான் கண்ட்ரோல் சி (Ctrl + C ) மற்றும் கண்ட்ரோல் வி (Ctrl + V ) கட்டளைகள்.

தேடுவதற்கான கட்டளைகள், மீண்டும் பதிவிடுவதற்கான கட்டளை ஆகியவற்றை  கண்டுபிடித்ததும் டெஸ்லர்தான். 
 
அதன்பின்னர், ஸ்டீவ் ஜாப்ஸ் அழைப்பின் பேரில் ஆப்பிள் நிறுவனத்தில் சேர்ந்த அவர், அங்கு 17ஆண்டுகள் தலைமை ஆராய்ச்சியாளராக இருந்தார். 

1997 ஆம் ஆண்டு அன்க்கிருந்து வெளியேறி, அமேசான் நிறுவனத்திலும் பின்னர், யாகூ நிறுவனத்திலும் பணியாற்றியவர் தனது 74 வது வயதில் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். 

கம்ம்யூட்டர் மென்பொருள் என்றால், பில்கேட்ஸ், ஸ்டீவ்ஜாப்ஸ் என உடனடியாக ஞாபகம் வந்தாலும், லாரி டெஸ்லர் போன்ற மகத்தானவர்களும் அதற்கு பின்னால் உழைத்துள்ளனர்.   

அந்த கண்டுபிடிப்பை தெரிந்து கொண்டபின், டெஸ்லருக்கு மனதுக்குள் நன்றி சொல்வீர்கள்.


Next Story

மேலும் செய்திகள்