அமெரிக்காவுக்கு செல்ல இந்திய பணியாளர்களுக்கு கட்டுப்பாடு - தகவல் தொழில்நுட்ப அமைப்பான நாஸ்காம் தகவல்

அமெரிக்காவில் செயல்பட்டு வரும், இந்திய நிறுவனங்களில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான அமெரிக்கர்கள் பணியாற்றி வருகின்றனர்.
அமெரிக்காவுக்கு செல்ல இந்திய பணியாளர்களுக்கு கட்டுப்பாடு - தகவல் தொழில்நுட்ப அமைப்பான நாஸ்காம் தகவல்
x
அமெரிக்காவில் செயல்பட்டு வரும், இந்திய நிறுவனங்களில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான அமெரிக்கர்கள் பணியாற்றி வருகின்றனர்.  இந்திய நிறுவனங்கள், இந்தியாவில் இருந்து பணியாளர்களை கொண்டு செல்வதற்கு அமெரிக்கா கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதனால் கடந்த சில ஆண்டுகளாக இந்திய பணியாளர்கள் அமெரிக்கா செல்வது குறைந்துள்ளதுடன், அமெரிக்கர்களுக்கு அதிக வேலை கிடைத்து வருவதாக, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் சங்கமான நாஸ்காம் கூறியுள்ளது. காக்னிசென்ட் நிறுவனத்தில் 46 ஆயிரம் அமெரிக்கர்களும், டி.சி.எஸ், இன்ஃபோசிஸ், ஹெச்.சி.எல்,  விப்ரோ நிறுவனங்களில் 55 ஆயிரத்துக்கு மேற்பட்ட அமெரிக்கர்களும் வேலை செய்து வருகின்றனர் என்றும் நாஸ்காம் கூறியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்