உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் - வீழ்ச்சியை சந்தித்து வரும் சீன பொருளாதாரம்

கொரோனாவின் தாக்கம் சீன வர்த்தகத்தில் மட்டுமல்ல உலக பொருளாதாரத்திலும் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் - வீழ்ச்சியை சந்தித்து வரும் சீன பொருளாதாரம்
x
கொரோனா வைரஸ் காரணமாக உலக பொருளாதார வளர்ச்சியில் தேக்கம் ஏற்படும் என சர்வதேச செலாவணி நிதியம் எச்சரிக்கை செய்துள்ள நிலையில், சீனாவின் வர்த்தகம் வேகமாக வீழ்ச்சியடைந்து வருகிறது.

சீனாவில் இருந்து பொருட்களையும் வாங்குவதை பல நாடுகளும் நிறுத்தியுள்ள நிலையில்,  இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு புதிய வர்த்தக வாய்ப்புகளும் உருவாகியுள்ளன.

இரும்பு உருக்கு உற்பத்தியில் உலகிலேயே சீனா முதலிடத்தில் உள்ள நிலையில்,  மூலப்பொருட்களும், உதிரி பாகங்களும் கிடைக்காமல் பல நிறுவனங்கள் உற்பத்தியை நிறுத்தி வைத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

ஆப்பிள், பாக்ஸ்கான், நிசான், ஹூண்டாய் உள்ளிட்ட நிறுவனங்கள் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யும் உதிரிபாகங்களை நிறுத்தி உள்ளன.

உலக ஸ்மார்ட்போன் வர்த்தகத்தில் சீனா பெரும் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், கொரோனா அச்சம் காரணமாக ஸ்பெயின் நாட்டில் நடைபெற வேண்டிய சர்வதேச மொபைல் வர்த்தக கண்காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.

சீனாவுடனான ஆயத்த ஆடைகள், ஜவுளிகளுக்கான ஒப்பந்தங்களை பல்வேறு நாடுகளும் ரத்து செய்துள்ளதால், தமிழ்நாட்டின் திருப்பூர், கரூர் நகரங்களில் வர்த்தகம் அதிகரிக்கும் என எதிர்பார்ப்பு உள்ளது.

சீனாவுக்கு சுற்றுலா செல்வதற்கு பல நாடுகளும் தடை செய்துள்ளதால், விமான நிறுவனங்களுக்கு சுமார் 40 ஆயிரம் கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச பொருளாதார அமைப்பு கூறியுள்ளது.

ஜப்பான், தாய்லாந்து, சிங்கப்பூர் நாடுகளுக்கான சுற்றுலா பொருளாதாரமும் தேக்கம் அடைந்துள்ளது. 

மருந்துகளுக்கான தட்டுப்பாடு நிலவுவதால், சுமார் 40 சதவீதம் வரை விலை உயர்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த அச்சம் காரணமாக, புழக்கத்தில் உள்ள பழைய நாணய நோட்டுகளை அழிப்பதற்கும் அந்த நாடு முடிவு செய்துள்ளது.
 
கொரோனா வைரஸ் மனிதர்களுக்கு மட்டுமல்ல, உலக வர்த்தகத்துக்கும் அபாய மணி அடித்துள்ளதாகவே வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்