92வது ஆஸ்கர் விருதுகள் அறிவிப்பு - லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் கோலாகல விழா
பதிவு : பிப்ரவரி 10, 2020, 02:27 PM
உலக திரைப்பட ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட ஆஸ்கர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த திரைப்படம் உள்பட 4 பிரிவுகளில் பாராசைட் திரைப்படம் விருதுகளை வென்று அசத்தியுள்ளது.
92வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் கோலாகலமாக நடைபெற்றது. தென் கொரிய படமான பாராசைட் ஒட்டுமொத்தமாக 4 விருதுகளை தட்டிச் சென்றது. முதல் உலக போரை மையப்படுத்தி வெளிவந்த 1917 திரைப்படத்திற்கு மூன்று விருதுகள் கிடைத்தது.

சிறந்த படத்திற்கான விருதை  பாராசைட் தட்டிச் சென்றுள்ளது. நைவ்ஸ் அவுட், மேரேஜ் ஸ்டோரி, 1917, ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் ஹாலிவுட், ஆகிய படங்கள் இந்த போட்டியில் இருந்த நிலையில், பாராசைட் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதேபோல், சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கர் விருதையும் தட்டிச் சென்றது கொரிய படமான பாராசைட். சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கர் விருதை பாராசைட் படத்திற்காக தட்டிச்சென்றார் போங் ஜுன் ஹோ..சிறந்த நடிகருக்கான விருதை ஜோக்கர் படத்தில் கதாநாயகனாக நடித்த ஜாக்குயின் பீனிக்ஸ் தட்டிச் சென்றார்.

சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருது, ஜூடி படத்தில் நடித்த, ரெனே ஸெல்விகர்க்கு வழங்கப்பட்டது. சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருது பிரபல ஹாலிவுட் நடிகர் பிராட் பிட் தட்டி சென்றார். Once upon a time in Hollywood படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக, அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. சிறந்த துணை நடிகைக்கான விருது MARRIAGE STORY படத்தில் நடித்த நடிகை லாரா டெர்னுக்கு வழங்கப்பட்டது. லாரா டெர்ன் நாளை தனது 53வது பிறந்த நாளை கொண்டாடவுள்ள நிலையில் பிறந்த நாள் பரிசாக அவருக்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது. 12சிறந்த அனிமேஷன் படத்திற்கான ஆஸ்கர் விருதை டாய் ஸ்டோரி - FOUR வென்றுள்ளது.

சிறந்த அனிமேஷன் குறும்படத்திற்கான ஆஸ்கர் விருது ஹேர் லவ் படத்திற்கு வழங்கப்பட்டது. சிறந்த ஒளிப்பதிவிற்கான விருதை, 1917 திரைப்படம் தட்டிச் சென்றுள்ளது. சிறந்த விசுவல் எபெக்ட்ஸுக்கான விருதை, 1917 திரைப்படம் தட்டிச் சென்றது.சிறந்த ஒளிப்பதிவு மற்றும் சவுண்டு மிக்ஸிங்கிற்கான ஆஸ்கர் விருதை பெற்றது, 1917 திரைப்படம்.

சிறந்த FILM EDITING மற்றும் SOUND EDITING-க்கான ஆஸ்கார் விருதுகளை FORD VS FERRARI திரைப்படம் வென்றது. சிறந்த தயாரிப்பு வடிவமைப்புக்கான ஆஸ்கர் விருது ஒன்ஸ் அபான் எ டைம் இன் ஹாலிவுட், படத்திற்கு வழங்கப்பட்டது.சிறந்த ஆவணப்படத்துக்கான ஆஸ்கர் விருது அமெரிக்கன் ஃபேக்டரி படத்திற்கு வழங்கப்பட்டது. சிறந்த குறு ஆவணப்படத்திற்கான ஆஸ்கர் விருது, லேர்னிங் டூ ஸ்கேட்போர்டு இன் எ வார்ஸோன், படத்திற்கு வழங்கப்பட்டது. சிறந்த குறும்படத்திற்கான விருதை தி நெய்பர்ஸ் விண்டோ படம் தட்டிச்சென்றது. ஸ்கார்லெட் ஜான்சன் நடிப்பில் வெளியான ஜோஜோ ராபிட் திரைப்படத்திற்கு சிறந்த தழுவல் திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது. சிறந்த ஒப்பனை மற்றும் சிகை அலங்காரத்துக்கான ஆஸ்கர் விருது பாம்ஷெல் படத்திற்கு  வழங்கப்பட்டது.

சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருது ராக்கெட்மேன் படத்தில் இடம் பெற்ற LOVE ME AGAIN பாடலுக்கு வழங்கப்பட்டுள்ளது.  ஜோக்கர் படத்திற்காக சிறந்த ஒரிஜினல் இசைக்கான விருதை பெண் இசைக்கலைஞர் ஹில்துர் பெற்றார்.11 பிரிவுகளில் போட்டியிட்ட ஜோக்கர் படத்திற்கு இரண்டு விருதுகள் மட்டுமே கிடைத்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படத்திற்கு VISUAL EFFECTS பிரிவில் விருது கிடைக்காமல் போனது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.


தொடர்புடைய செய்திகள்

(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...?

சிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக

749 views

விலங்கு காட்சி சாலையாக மாறிய சர்க்கஸ் - கொரோனாவால் தொழிலே மாறிப் போச்சு...

உலகெங்கும் சர்க்கஸ் உள்ளிட்ட கேளிக்கை காட்சிகள் தடை செய்யப்பட்டிக்கும் நிலையில் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஒரு சர்க்கஸ் நிறுவனம், இதற்கு ஒரு மாற்று வழியை கண்டுபிடித்திருக்கிறது.

375 views

"புதிய மின்சார சட்டம்" : குறைகளை மத்திய அரசிடம் விளக்குவோம் - அமைச்சர் தங்கமணி

புதிய மின்சார சட்டத்தால் தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மாநில அரசு மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

193 views

பெல் தொழிற்சாலையை நம்பியுள்ள சிறு,குறு தொழில்கள் - ஊரடங்கால் வாழ்வாதாரம் கேள்விக்குறி

ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காடு அருகே செயல்பட்டு வரும் மத்திய தொழில்துறை நிறுவனமான பெல் தொழிற்சாலையை மூலாதாரமாக கொண்டு, சிறு குறு தொழில்களான பெல் துணை தொழிற்கூடங்களில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர்.

156 views

வேலூரில் இரவு 9 மணி வரை துணிக்கடை செயல்பட அனுமதி - ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு அனுமதி

வேலூர் மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, ஊரடங்கிலிருந்து சில தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

93 views

பிற செய்திகள்

கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் ரூ.638 லட்சம் கோடி இழப்பு ஏற்படும்

கொரோனா பாதிப்பால் உலக நாடுகளின் உற்பத்தில் 638 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என ஐ.நா அமைப்பு தெரிவித்துள்ளது.

37 views

உலக சுகாதார மையத்திலிருந்து அமெரிக்கா விலகல் - அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி

உலக சுகாதார மையத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அந்நாட்டு அதிபர் டிரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார்.

1293 views

இந்திய, சீன எல்லை விவகாரம் தொடர்பான பிரச்சனை - "யாரும் சமரசம் செய்ய வர வேண்டாம்" - சீனா மீண்டும் அதிரடி

இந்தியா - சீனா இடையே நிலவி வரும் பிரச்சனையை தீர்க்க மூன்றாம் தரப்பு யாரும் தேவையில்லை என சீனா மீண்டும் உறுதிபட தெரிவித்துள்ளது.

45 views

கொரோனாவோடு பழகுவோம் - ஊரடங்கு அலப்பறைகள்

கொரோனா வைரஸ் தந்த நெருக்கடி மற்றும் ஊரடங்கு காலகட்டம் காரணமாக உலகம் முழுவதுமே பொதுமக்கள் பல வித்தியாச விஷயங்களை செய்து மன அழுத்தத்துக்கு மருந்து தடவி வருகிறார்கள்.

21 views

கண்ணாடியை துடைத்தால் உருவம் மாறும்..? - தீயாய் பரவும் டிக்டாக் விளையாட்டு...

சமூக வலைத்தளங்களில் தற்போது கண்ணாடியை துடைக்கும் மாயாஜால சவால் விளையாட்டு ஒன்று வேகமாக பரவி வருகிறது.

43 views

துபாயில் ஊரடங்கு தளர்த்தப்பட்டது...

​சுற்றுலா நகரம் துபாயில் ஊரடங்கு தளர்த்தப்பட்டதை தொடர்ந்து திரையரங்கள்,மால்கள் மற்றும் பனி சறுக்கு விளையாட்டு மையங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

16 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.