92வது ஆஸ்கர் விருதுகள் அறிவிப்பு - லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் கோலாகல விழா
உலக திரைப்பட ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட ஆஸ்கர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த திரைப்படம் உள்பட 4 பிரிவுகளில் பாராசைட் திரைப்படம் விருதுகளை வென்று அசத்தியுள்ளது.
92வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் கோலாகலமாக நடைபெற்றது. தென் கொரிய படமான பாராசைட் ஒட்டுமொத்தமாக 4 விருதுகளை தட்டிச் சென்றது. முதல் உலக போரை மையப்படுத்தி வெளிவந்த 1917 திரைப்படத்திற்கு மூன்று விருதுகள் கிடைத்தது.
சிறந்த படத்திற்கான விருதை பாராசைட் தட்டிச் சென்றுள்ளது. நைவ்ஸ் அவுட், மேரேஜ் ஸ்டோரி, 1917, ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் ஹாலிவுட், ஆகிய படங்கள் இந்த போட்டியில் இருந்த நிலையில், பாராசைட் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதேபோல், சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கர் விருதையும் தட்டிச் சென்றது கொரிய படமான பாராசைட். சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கர் விருதை பாராசைட் படத்திற்காக தட்டிச்சென்றார் போங் ஜுன் ஹோ..சிறந்த நடிகருக்கான விருதை ஜோக்கர் படத்தில் கதாநாயகனாக நடித்த ஜாக்குயின் பீனிக்ஸ் தட்டிச் சென்றார்.
சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருது, ஜூடி படத்தில் நடித்த, ரெனே ஸெல்விகர்க்கு வழங்கப்பட்டது. சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருது பிரபல ஹாலிவுட் நடிகர் பிராட் பிட் தட்டி சென்றார். Once upon a time in Hollywood படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக, அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. சிறந்த துணை நடிகைக்கான விருது MARRIAGE STORY படத்தில் நடித்த நடிகை லாரா டெர்னுக்கு வழங்கப்பட்டது. லாரா டெர்ன் நாளை தனது 53வது பிறந்த நாளை கொண்டாடவுள்ள நிலையில் பிறந்த நாள் பரிசாக அவருக்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது. 12சிறந்த அனிமேஷன் படத்திற்கான ஆஸ்கர் விருதை டாய் ஸ்டோரி - FOUR வென்றுள்ளது.
சிறந்த அனிமேஷன் குறும்படத்திற்கான ஆஸ்கர் விருது ஹேர் லவ் படத்திற்கு வழங்கப்பட்டது. சிறந்த ஒளிப்பதிவிற்கான விருதை, 1917 திரைப்படம் தட்டிச் சென்றுள்ளது. சிறந்த விசுவல் எபெக்ட்ஸுக்கான விருதை, 1917 திரைப்படம் தட்டிச் சென்றது.சிறந்த ஒளிப்பதிவு மற்றும் சவுண்டு மிக்ஸிங்கிற்கான ஆஸ்கர் விருதை பெற்றது, 1917 திரைப்படம்.
சிறந்த FILM EDITING மற்றும் SOUND EDITING-க்கான ஆஸ்கார் விருதுகளை FORD VS FERRARI திரைப்படம் வென்றது. சிறந்த தயாரிப்பு வடிவமைப்புக்கான ஆஸ்கர் விருது ஒன்ஸ் அபான் எ டைம் இன் ஹாலிவுட், படத்திற்கு வழங்கப்பட்டது.சிறந்த ஆவணப்படத்துக்கான ஆஸ்கர் விருது அமெரிக்கன் ஃபேக்டரி படத்திற்கு வழங்கப்பட்டது. சிறந்த குறு ஆவணப்படத்திற்கான ஆஸ்கர் விருது, லேர்னிங் டூ ஸ்கேட்போர்டு இன் எ வார்ஸோன், படத்திற்கு வழங்கப்பட்டது. சிறந்த குறும்படத்திற்கான விருதை தி நெய்பர்ஸ் விண்டோ படம் தட்டிச்சென்றது. ஸ்கார்லெட் ஜான்சன் நடிப்பில் வெளியான ஜோஜோ ராபிட் திரைப்படத்திற்கு சிறந்த தழுவல் திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது. சிறந்த ஒப்பனை மற்றும் சிகை அலங்காரத்துக்கான ஆஸ்கர் விருது பாம்ஷெல் படத்திற்கு வழங்கப்பட்டது.
சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருது ராக்கெட்மேன் படத்தில் இடம் பெற்ற LOVE ME AGAIN பாடலுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஜோக்கர் படத்திற்காக சிறந்த ஒரிஜினல் இசைக்கான விருதை பெண் இசைக்கலைஞர் ஹில்துர் பெற்றார்.11 பிரிவுகளில் போட்டியிட்ட ஜோக்கர் படத்திற்கு இரண்டு விருதுகள் மட்டுமே கிடைத்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படத்திற்கு VISUAL EFFECTS பிரிவில் விருது கிடைக்காமல் போனது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.
Next Story

