ஃபேஸ்புக்கில் தகவல் தெரிவித்துவிட்டு தாக்குதல் : துப்பாக்கி சூடு தாக்குதலில் 20 பேர் உயிரிழப்பு
தாய்லாந்தில் உள்ள வணிக வளாகம் ஒன்றில், பொதுமக்கள் மீது ஒருவர் சரமாரியாக துப்பாக்கச்சூடு நடத்தியதில் 20 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
தாய்லாந்தின் நகோன் ராட்சசிமா மாகானத்தில் உள்ள டெர்மினல் என்ற வணிக வளாகத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. Jakrapanth Thomma என்ற நபர் வணிக வளாகத்தில் புகுந்து துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார். அங்குள்ள குடியிருப்பு பகுதி, ராணுவ முகாம் என பல இடங்களிலும் இவர் தாக்குதல் நடத்தியதாக தெரிகிறது. இந்த துப்பாக்கிச் சூட்டில் 20 பேர் உயிரிழந்திருக்கலாம் என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. தாக்குதல் நடத்திய நபர், அந்த வணிக வளாகத்தில் பதுங்கி இருக்கும் நிலையில், உள்ளே நூற்றுக்கணக்கான மக்கள் இருப்பதால் போலீசார் அதிரடி நடவடிக்கை எடுக்க முடியாத சூழல் நிலவுகிறது. இந்த தாக்குதலுக்கு முன்பாக அந்த நபர் தன் ஃபேஸ்புக் பக்கத்தில் அனைவருக்கும் இறப்பு தவிர்க்க முடியாதது என்ற வாசகத்தை பதிவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை வைத்து போலீசார், அந்த நபரின் புகைப்படம் மற்றும் தகவல்களை சேகரித்துள்ளனர். துப்பாக்கிச் சூடு தாக்குதல், மக்கள் பதுங்கிய காட்சிகள், போலீசாரின் நடவடிக்கைகள் என வெளியாகியுள்ள காட்சிகள், அங்குள்ள பதற்றமான சூழலை வெளிப்படுத்துகின்றன.
Next Story

