கொரோனா பாதிப்பு குறித்து இலங்கையிடம் சீனா விளக்கம் : வுகானில் மட்டும் பெரிய பாதிப்பு என விளக்கம்

சீனாவுடன் நட்பு பாராட்டி வரும் இலங்கைக்கு கொரோனா பாதிப்பு குறித்து , சீன தூதர் நேரடியாக விளக்கம் அளித்துள்ளார்.
கொரோனா பாதிப்பு குறித்து இலங்கையிடம் சீனா விளக்கம் : வுகானில் மட்டும் பெரிய பாதிப்பு என விளக்கம்
x
இலங்கை அதிபர் கோட்டபய ராஜபக்சேவை சீன தூதர் நேரில் சந்தித்து பேசினார். அப்போது கொரோனா வைரஸ்  பாதிப்பு 99 சதவீதம் வுகான் மாகாணத்தில் மட்டுமே உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. சீன புத்தாண்டின் போது மக்கள் பெரிய அளவிற்கு இடமாற்றம் செய்தனர் என்றும் அப்போது தான் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாக சீன தூதர் இலங்கை அதிபரிடம் கூறினார். சீன புத்தாண்டின் போது இலங்கையில் விடுமுறை இல்லை என்பதால் , இலங்கையில் வசிக்கும் சீன மக்கள் சொந்த நாட்டிற்கு  செல்லவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.  சீனாவை தாண்டி ஒரே ஒருவருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு உள்ளது என்றும் சீன தூதர் கூறினார். கடினமான காலத்தில் சீனாவிற்கு துணை நிற்கும் இலங்கைக்கு அதிபர் ஷின்பிங் சார்பாக நன்றி தெரிவித்து கொள்வதாகவும், சீன தூதர் கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்