பாஃப்டா விருதுகள் அறிவிப்பு - 7 விருதுகளை அள்ளிய "1917" திரைப்படம்
இங்கிலாந்தின் லண்டன் நகரில் நடைபெற்ற பாஃப்டா திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் 1917 திரைப்படம் 7 பிரிவுகளில் விருதுகளை வென்றுள்ளது.
இங்கிலாந்தின் லண்டன் நகரில் நடைபெற்ற பாஃப்டா திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில், முதலாம் உலக போரை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட1917 திரைப்படம், சிறந்த திரைப்படம், ஒளிப்பதிவு உள்ளிட்ட 7 பிரிவுகளில் விருதுகளை வென்றுள்ளது. ஜோக்கர் திரைப்படத்தில் நடித்த ஜாக்குவின் பீனிக்ஸ் சிறந்த நடிகருக்கான விருதை வென்றார். ஜுடி திரைப்படத்தில் நடித்த, ரெனி ஜெல்வெகர் சிறந்த நடிகையாகயும், சிறந்த துணை நடிகருக்கான விருதை பிராட் பிட்டும், துணை நடிகைக்கான விருதை லாரா டேரனும் தட்டிச்சென்றனர். தென் கொரியாவின் பாரசைட் திரைப்படம் சிறந்த வெளிநாட்டு படமாகவும், நெட் பிளிக்ஸ் வெளியிட்ட கிளாஸ் திரைப்படம், சிறந்த அனிமேஷன் படமாகவும் தேர்வாகி உள்ளது.
Next Story

