ஆப்கானிஸ்தானில் தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் : அமெரிக்க ராணுவ விமானம் என தகவல்

ஆப்கானிஸ்தானில் நிகழ்ந்த விமான விபத்தில், தரையில் விழுந்து நொறுங்கிய விமானம், பயணிகள் விமானமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
ஆப்கானிஸ்தானில் தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் : அமெரிக்க ராணுவ விமானம் என தகவல்
x
ஆப்கானிஸ்தானில் நிகழ்ந்த விமான விபத்தில், தரையில் விழுந்து நொறுங்கிய விமானம், பயணிகள் விமானமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. ஹிரட் நகரில் இருந்து காபுல் நோக்கிச் சென்ற அந்த விமானம், டே யாக் மாவட்ட பகுதியை கடந்தபோது தரையில் விழுந்து நொறுங்கியதாக, கஜ்னி மாகாணத்தின் அரசு செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த விமானம் தீப்பிடித்து, நொறுங்கி விழுந்ததாகவும் கூறப்படுகிறது. இதனிடையே, இந்த விமானம் ஆரியானா விமான சேவை நிறுவனத்தை சேர்ந்தது என்றும், 83 பேர் அதில் பயணம் செய்ததாகவும் கூறப்பட்டது. ஆனால், அந்த நிறுவனம் இதனை மறுத்துள்ளது. இந்நிலையில், விபத்துக்குள்ளான விமானம், அமெரிக்க ராணுவத்திற்கு சொந்தமான ஜெட் ரக விமானம் என்றும், இதை ஆப்கானிஸ்தானில் உளவு பணியை மேற்கொள்வதற்காக அமெரிக்க விமானப்படை பயன்படுத்தி வருவதும் தெரியவந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்