சுலைமான் கொல்லப்பட்ட காட்சிகள் என பரவும் வீடியோ - வான்வெளி தாக்குதல் அல்ல, வீடியோ கேம்

சமூக வலைதளங்களில் பரவும் சில தகவல்களும் காட்சிகளும் தினமும் நம்மை பிரமிக்க வைக்கின்றன. அவற்றில் எவ்வளவு உண்மை இருக்கிறது...?
சுலைமான் கொல்லப்பட்ட காட்சிகள் என பரவும் வீடியோ - வான்வெளி தாக்குதல் அல்ல, வீடியோ கேம்
x
அதிரவைக்கும் குண்டு மழை பொழியும் இந்தக் காட்சி சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.

ஈரான் ராணுவ கமாண்டர்  சுலைமானி அமெரிக்க வான்வழி தாக்குதலில் ஜனவரி 3ஆம் தேதி கொல்லப்பட்டார். பாக்தாத் நகர விமான நிலையத்தில் ஜனவரி 3ஆம் தேதி ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் அவர் கொல்லப்பட்டார்.

சம்பவம் நடந்த இரண்டு நாள் கழித்து ஜனவரி 6ஆம் தேதி பென்டே ஹடோஸ் டி சென்பான் pendehados di chenbon என்ற பேஸ்புக் பக்கத்தில், குண்டு மழை பொழியும் இந்த காட்சிகள் அடங்கிய வீடியோ வெளியிடப்பட்டது. அதனைப் பார்த்த நூற்றுக்கும் மேற்பட்டோர் சமூக வலை தளங்களில் பரப்பினார்.

வைரல் டிவி என்ற பேஸ்புக் பக்கத்தில் அதே வீடியோ ஜனவரி ஏழாம் தேதி வெளியிடப்பட்டது. சுலைமானி கொல்லப்பட்ட காட்சிகள்  என சொல்லப்பட்டதால் அதை 2 லட்சத்து 36 ஆயிரம் பேர் பார்த்துள்ளனர். 548 பேர் சமூக வலைதளங்களில் பரப்பினர்.

குண்டு மழை பொழியும் இந்த காட்சியால் ஈர்க்கப்பட்ட பலர் வாட்ஸ்அப் குழுக்களிலும் பரப்பியுள்ளனர்.

ஆனால் இந்த காட்சிகள் சுலைமானி கொல்லப்பட்ட காட்சிகள் அல்ல. ஏசி 130 சிமுலேட்டர் என்ற பெயரில் ஒரு வீடியோ கேம் நிறுவனம் 2014 ஆம் ஆண்டு வெளியிட்ட வீடியோ கேம் காட்சிகள்தான் இவை.

2014 ஆம் ஆண்டு நவம்பர் 20 ஆம்  தேதியும், 2015ஆம் ஆண்டு
மார்ச் 25ஆம் தேதியும் இந்த குண்டு மழை பொழியும் வீடியோ காட்சிகள் யூடியூபில் வெளியாகி உள்ளன. சுலைமானி கொல்லப்பட்ட காட்சி என பரப்பப்பட்டவை  வீடியோ கேம் காட்சிகளே. 

Next Story

மேலும் செய்திகள்