ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறும் விவகாரம் : எலிசபெத் மகாராணி ஒப்புதலுக்காக மசோதா அனுப்பிவைப்பு

ஐரோப்பிய கூட்டமைப்பை விட்டு இந்த மாதம் 31 ஆம் தேதி வெளியேறும் பிரிட்டன் முயற்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது
ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறும் விவகாரம் : எலிசபெத் மகாராணி ஒப்புதலுக்காக மசோதா அனுப்பிவைப்பு
x
ஐரோப்பிய கூட்டமைப்பை விட்டு இந்த மாதம் 31 ஆம் தேதி வெளியேறும் பிரிட்டன் முயற்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. பிரஸல்ஸ் உடனான பிரிட்டன் ஒப்பந்தம் தொடர்பான மசோதாவுக்கு  அந்நாட்டு நாடாளுமன்றம் புதன்கிழமை  ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மசோதாவுக்கு எலிசபெத் மகாராணி ஒப்புதல் அளிக்கும் நிலையில், அது சட்டமாக அமலுக்கு வரும். இன்றே இந்த மசோதாவுக்கு ஒப்புதல் கிடைத்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 3 ஆண்டுகளாக நீடித்து வந்த இந்த பிரச்சனை தற்போது முடிவுக்கு வந்துள்ளதற்கு காரணம் அண்மையில் நடைபெற்ற தேர்தலில் போரிஸ் ஜான்சன் தலைமையலிான கன்சர்வேடிவ் கட்சிக்கு கிடைத்த அறுதிப் பெரும்பான்மை தான் என கூறப்படுகிறது. 


Next Story

மேலும் செய்திகள்