சீனாவை மிரட்டும் உயிர்க்கொல்லி வைரஸ்

சீனாவின் Hubei மாகாணத்தில் உள்ள Wuhan நகரில்தான் இந்த வைரஸ் முதன் முதலில் கண்டறியப் பட்டிருக்கிறது.
சீனாவை மிரட்டும் உயிர்க்கொல்லி வைரஸ்
x
சீனாவின் Hubei மாகாணத்தில் உள்ள Wuhan நகரில்தான் இந்த வைரஸ் முதன் முதலில் கண்டறியப் பட்டிருக்கிறது. அதனால்தான் Wuhan Coronavirus என அழைக்கப்படுகிறது. பொதுவாக விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவுகின்ற ஒரு வகையான நுண்ணுயிர்களே Coronavirus என அழைக்கப்படுகின்றன. 
இந்த வகை வைரஸ்கள் மூச்சு விடுவதில் சிரமத்தை ஏற்படுத்திதான் மரணத்தை விளைவிக்கும். இதற்கு முன் இதே சீனாவை 2003ஆம் ஆண்டு இதே போன்ற இன்னொரு கொரானா வைரஸ் தாக்கியது. தீவிரமான சுவாசப் பிரச்னைகளை ஏற்படுத்தியதால் அந்த பாதிப்பை  Severe Acute Respiratory Syndrome என அழைத்தனர். அதன் சுருக்கம்தான் சார்ஸ். உலகையே அச்சுறுத்திய சார்ஸ், 650 உயிர்களை பலி கொண்டதை யாருமே அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட முடியாது.
சார்ஸ் Coronavirus போலவே ஆசியாவைத் தாக்கிய இன்னொரு நுண்ணுயிர்தான் MERS Coronavirus. மத்திய கிழக்கு நாடான சவுதி அரேபியாவில் கண்டறியப்பட்டதால் இது Middle East respiratory syndrome என அழைக்கப்பட்டது. சீனர்கள், கொரிய மக்கள் என இந்த வைரஸ் இதுவரை 282 பேரை காவு வாங்கியிருக்கிறது. 
இந்த Coronavirus, இதுவரை மனிதர்களை தாக்கிய சம்பவங்கள் எல்லாமே ஆசியாவில் இருந்து தொடங்கியிருப்பதுதான் வேதனை. ஒவ்வொரு முறை சீனாவை கொரோனாவைரஸ் தாக்கும் போதும், இது அமெரிக்காவால் திட்டமிட்டு ஏவப்பட்ட தாக்குதல் என சீனா குற்றம் சாட்டுவதும்... சீனர்கள் விதவிதமான விலங்குகளை சமைக்காமல் உண்பதால்தான் இப்படிப்பட்ட நோய்கள் வருகின்றன என அமெரிக்கா குற்றம் சுமத்துவதும் வாடிக்கையாகிவிட்டது. ஆனால், தொழில்நுட்பத்தில் சிறந்துவிளங்கும் இந்த இரண்டு நாடுகளுமே இதுவரை கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு முறையான மருந்துகளை கண்டுபிடிக்க வில்லை என்பது வேதனையிலும் வேதனை!

Next Story

மேலும் செய்திகள்