சீனாவில் பரவும் புதிய வைரஸ் "கொரோனா" - 4 பேர் உயிரிழப்பு

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலால் இதுவரை 4 பேர் பலியாகி உள்ளனர்.
சீனாவில் பரவும் புதிய வைரஸ் கொரோனா - 4 பேர் உயிரிழப்பு
x
சீனா மற்றும் ஹாங்காங்கில் கடந்த 2003 மற்றும்2004 ஆம் ஆண்டுகளுக்கு இடைபட்ட காலங்களில் சார்ஸ் என்ற நோய் பாதிப்பால் 650 பேர் உயிரிழந்தனர். இந்த நோயின் தாக்கத்தால், கனடா, தைவான், சிங்கப்பூர், அமெரிக்கா என பல நாடுகளிலும் உயிரிழப்புகள் நிகழ்ந்தேறின. இந்த நிலையில், தற்போது சீனாவில் சார்ஸ் வைரசுடன் தொடர்புடைய புதிய வகை கொரோனா வைரஸ் தாக்குதல் தீவிரமடைந்துள்ளது. சீனாவின் மத்திய நகரான வூஹானில் முதலில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ் , தலைநகர் பீஜிங் வரை பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரஸால் கடந்த வாரத்தில் மட்டும்140 பேர் பாதிப்படைந்துள்ளனர். இதுவரை 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்