டிரம்பை பதவி நீக்க ஜனநாயக கட்சி கொண்டு வந்த தீர்மானங்கள் தோற்கடிப்பு

அமெரிக்க அதிபர் டிரம்புக்கு எதிரான ஆவணங்களை பெற ஜனநாயக கட்சி எம்.பி.க்கள் கொண்டு வந்த தீர்மானங்கள் செனட் சபையில் தோற்கடிக்கப்பட்டு உள்ளது.
டிரம்பை பதவி நீக்க ஜனநாயக கட்சி கொண்டு வந்த தீர்மானங்கள் தோற்கடிப்பு
x
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை பதவி நீக்கம் செய்வதற்கான ஆவணங்களை, நிதிநிலை மற்றும் மேலாண்மை உள்ளிட்ட துறைகளில் இருந்து பெறுவதற்காக, ஜனநாயக கட்சி எம்.பி.க்கள் 3 பேர் செனட்டில் தீர்மானம் கொண்டு வந்தனர். இந்த தீர்மானம் குடியரசுக் கட்சி ஆதிக்கம் உள்ள செனட்டில் தோற்கடிக்கப்பட்டு உள்ளது. தீர்மானத்திற்கு ஆதரவாக 47 வாக்குகளும், எதிராக 53 வாக்குகளும் பதிவானது. இந்த வாக்கெடுப்பில் கட்சி அடிப்படையிலேயே உறுப்பினர்கள் வாக்களித்து உள்ளனர். தம்மை எதிர்த்து போட்டியிடும் ஜோ பிடனுக்கு எதிராக விசாரணை நடத்த வேண்டும் என்றும், அதற்கு உக்ரைன் சம்மதிக்காத நிலையில் அதன் மீது பொருளாதார தடைவிதிக்கப்படும் என டிரம்ப் மிரட்டியதாக குற்றச்சாட்டு. மேலும், இதுதொடர்பாக அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு தவறான தகவல் அளித்ததான குற்றச்சாட்டு பேரில் டிரம்பை பதவி நீக்கக் கோரி செனட்டில் தீர்மானம் கொண்டு வரு ஜனநாயக கட்சியினர் எடுத்து முயற்சி ஆரம்ப நிலையிலேயே தடுக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. 


Next Story

மேலும் செய்திகள்