சீனாவில் பரவும் புதிய கொரோனா வைரஸ்

சீனாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸுக்கு இதுவரை 3 பேர் பலியாகி உள்ளனர்.
சீனாவில் பரவும் புதிய கொரோனா வைரஸ்
x
சீனா மற்றும் ஹாங்காங்கில் கடந்த 2002 மற்றும் 2003 ஆம் ஆண்டு SARS நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு 650 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது அது போன்ற ஒரு வைரஸ் தொற்று சீனாவில் வேகமாக பரவி வருகிறது. 

இது மனிதர்கள் மூலம் பரவும் என்பதால் அங்குள்ள உகான் மாகாணத்தில் உச்சக்கட்ட விழிப்பு நிலை உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக விவாதிக்க உலக பொது சுகாதார நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது. இதனிடையே, சீனாவின் வசந்த கால விடுமுறைக்காக, இவ்வார இறுதியில் மக்கள் பயணங்களை மேற்கொள்ள உள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சீன அரசு எடுத்து வருகிறது. இந்த பிதிய நோய் தொற்று 218 பேருக்கு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளதாகவும், இது தாக்குபவர்களுக்கு மூச்சுத் திணறல் அதிக அளவில் ஏற்படும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். திங்கள்கிழமை பெய்ஜிங் மற்றும் ஷங்காயில் இந்த நோய் தொற்று கண்டறியப்பட்ட நிலையில், குவாங்டாங் மாகாணத்தில் பலருக்கும், உகான் மாகாணத்தில் 136 பேருக்கு நோய் தொற்று தாக்கியது தெரிய வந்துள்ளது. உகானில் இதுவரை 3 பேர் உயிரிழந்து உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மீன் உணவு மூலமாக இது அதிகம் பரவ வாய்ப்புள்ளது தெரிய வந்தள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்