ஆஸ்திரேலியாவில் புதர் தீயால் 50 லட்சம் ஹெக்டேர் சேதம் - 80 கோடி விலங்குகள் உயிரிழப்பு

ஆஸ்திரேலியாலில் புதர் தீயால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள உயிரினங்களுக்கு வான்வெளியாக உணவு வழங்கும் பணி தொடங்கி உள்ளது.
ஆஸ்திரேலியாவில் புதர் தீயால் 50 லட்சம் ஹெக்டேர் சேதம் - 80 கோடி விலங்குகள் உயிரிழப்பு
x
ஆஸ்திரேலியாவின் நியூசவுத்வேல்ஸ் உள்ளிட்ட 5 மாகாணங்களில் கடந்த 3 மாதமாக பரவி வரும் புதர்   தீக்கு இதுவரை 28 பேர் உயிரிழந்துள்ளனர். 2 ஆயிரம் வீடுகள் மற்றும் 75 லட்சம் ஏக்கர் வனப்பகுதி நிலங்கள் முற்றிலும் எரிந்து சேதமாகி உள்ளன. இந்த பகுதியில் வசித்து வரும் சுமார் 80 கோடி விலங்குகள் புதர் தீக்கு பலியாகி உள்ளதாக சிட்னி பல்கலைக் கழக பேராசிரியர் ஷெரிஷ் டிக்மேன் தெரிவித்துள்ளார். இந்த தீ விபத்தில் பல அருகி வரும் உயிரினங்கள் அழிந்து வரும் நிலையில், அவற்றை பாதுகாக்கும் பணியில் விலங்கின ஆர்வலர்களும், பிராணிகள் நலத்துறையினரும் ஈடுபட்டு வருகின்றனர். முதற்கட்டமாக புதர் தீயால் வனப்பகுதியில் உள்ள பாதிக்கப்பட்ட உயிரினங்களுக்கு உணவு வழங்கும் பணி ஹெலிகாப்டர் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இனிப்பு உருளைக் கிழங்கு மற்றும் கேரட்டுகள் ஆங்காங்கே வைக்கப்பட்டு வருகிறது. 


Next Story

மேலும் செய்திகள்