இளவரசர் ஹாரியை சமாதானப்படுத்தும் முயற்சியில், ராணி எலிசபெத்
பதிவு : ஜனவரி 13, 2020, 01:43 AM
பிரிட்டனின் அரசக் குடும்பத்தில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ள இளவரசர் ஹாரியை சமாதானப்படுத்தும் முயற்சியில், ராணி எலிசபெத் ஈடுபட்டுள்ளார்.
பிரிட்டன் அரசக் குடும்பத்தின் இளவரசர் ஹாரியும்,
அவரின் மனைவியுமான முன்னாள் நடிகை மேகன், ஆகியோர், அரசக் குடும்பத்தில் இருந்து வெளியேறுவதாக, அறிவித்தனர். இது, ராணி எலிசபெத்திற்கும்,  ஹாரியின் தந்தையுமான இளவரசர் சார்லஸ் உள்ளிட்டோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேகன், கனடா சென்றுவிட்ட நிலையில், ஹாரியும் கனடா செல்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. இந்த நிலையில்,  ஹாரியை சமாதானப்படுத்தும் முயற்சியில்,ராணி எலிசபெத் உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளனர். திங்கள் கிழமையன்று இது தொடர்பாக அவர் ஹரியின் மூத்த சகோததர் உள்ளிட்டோரிடம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். முன்னதாக ராணி எலிசபெத், தேவாலயத்தில் பிரார்த்தனையில் ஈடுபட்டார். இதனிடையே, யானைகளைப் பாதுகாப்பதற்காக செயல்படும் தொண்டு நிறுவனத்திற்கு நன்கொடை அளிப்பதற்காக, மேகன், டிஸ்னிக்காக குரல்வழி பதிவு செய்ய ஒப்புக் கொண்டதாக இளவரசர் ஹாரி தெரிவித்துள்ளார். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.