"மூத்த உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகுகிறோம்" - இளவரசர் ஹாரி, மேகன் தம்பதி அறிவிப்பு
பதிவு : ஜனவரி 10, 2020, 07:49 AM
இங்கிலாந்து அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர் பொறுப்பில் இருந்து வெளியேறுவதாக இளவரசர் ஹாரி மற்றும் இளவரசி மேகன் தெரிவித்துள்ளது அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இங்கிலாந்து அரசு எடுக்கும் முடிவுகளில், அரச குடும்பத்தின் பங்கு முக்கியமாக பார்க்கப்படுகிறது. இந்தநிலையில், அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலக உள்ளதாக இளவரசர் ஹாரி மற்றும் இளவரசி மேகன் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இன்ஸ்டாகிராமில் அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இங்கிலாந்து மற்றும் வட அமெரிக்காவில் தங்களின் நேரத்தை சமமாக செலவிடத் திட்டமிட்டுள்ளோம் என்றும், இங்கிலாந்து அரசுக்கும், ராணிக்கும் ஏதாவது உதவி தேவைப்பட்டால் செய்வோம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
ஆட்சி செய்வதில் நாங்கள் விருப்பம்  கொள்ளவில்லை என்றும்,  நிதி சார்ந்து சுதந்திரமாக செயல்பட உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த அறிவிப்பு அந்நாட்டு மக்களுக்கு மட்டுமின்றி அரச குடும்பத்துக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே, பக்கிங்காம் அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கையில், இளவரசர் மற்றும் இளவரசியின் முடிவால் அரச குடும்பம் கவலை அடைந்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இளவரசர் ஹாரி, அமெரிக்க நடிகையான மேகனை காதலித்து திருமணம் செய்து கொண்டதும், அந்த தம்பதிக்கு கடந்த ஆண்டு ஆண் குழந்தை பிறந்ததும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

இலங்கை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் மரணம் - உடல் நலக்குறைவால் உயிரிழப்பு

இலங்கை அமைச்சரும், தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான ஆறுமுகன் தொண்டமான் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.

189 views

எல்லையில் இருநாட்டு ராணுவ வீரர்கள் குவிப்பால் பரபரப்பு...

இந்தியாவில் உள்ள சீனர்கள் நாடு திரும்ப சீன அரசு புதிய ஏற்பாடுகளை அறிவித்துள்ளது.

36 views

கொரோனா : "2-வது ஆட்டத்தை எதிர்கொள்ள தயாராகுங்கள்" - உலக சுகாதாரத்துறை நிறுவனம் எச்சரிக்கை

கொரோனாவின் இரண்டாம் கட்ட ஆட்டத்தை எதிர்கொள்ள தயாராகுங்கள் என சர்வதேச நாடுகளுக்கு உலக சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

731 views

உயிர்தியாகம் செய்தவர்களுக்கான நினைவு நாள் நிகழ்வுகளை தொடங்கி வைத்த டிரம்ப் - உயிர்நீத்த வீரர், வீராங்கனைகளுக்கு அஞ்சலி

அமெரிக்க முப்படைகளில் பணியாற்றி, நாட்டிற்காக உயிர்தியாகம் செய்தவர்களுக்காக ஆண்டு தோறும் மே 25 ஆம் தேதியை அமெரிக்கர்கள் நினைவு நாளாக அனுசரித்து வருகின்றனர்.

11 views

இந்தியாவில் உள்ள சீனர்கள் நாடு திரும்ப சீன அரசு புதிய ஏற்பாடு

இந்தியாவில் உள்ள சீனர்கள் நாடு திரும்ப சீன அரசு புதிய ஏற்பாடுகளை அறிவித்துள்ளது.

13 views

கொரோனா பாதிப்புக்கு தரப்படும் மலேரியா மருந்து - ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் தற்காலிக நிறுத்தம்" - உலக சுகாதாரத்துறை அமைப்பு அறிவிப்பு

கொரோனா பாதிப்புக்கு தரப்படும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக உலக சுகாதாரத்துறை அமைப்பு அறிவித்துள்ளது.

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.