"மூத்த உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகுகிறோம்" - இளவரசர் ஹாரி, மேகன் தம்பதி அறிவிப்பு
பதிவு : ஜனவரி 10, 2020, 07:49 AM
இங்கிலாந்து அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர் பொறுப்பில் இருந்து வெளியேறுவதாக இளவரசர் ஹாரி மற்றும் இளவரசி மேகன் தெரிவித்துள்ளது அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இங்கிலாந்து அரசு எடுக்கும் முடிவுகளில், அரச குடும்பத்தின் பங்கு முக்கியமாக பார்க்கப்படுகிறது. இந்தநிலையில், அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலக உள்ளதாக இளவரசர் ஹாரி மற்றும் இளவரசி மேகன் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இன்ஸ்டாகிராமில் அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இங்கிலாந்து மற்றும் வட அமெரிக்காவில் தங்களின் நேரத்தை சமமாக செலவிடத் திட்டமிட்டுள்ளோம் என்றும், இங்கிலாந்து அரசுக்கும், ராணிக்கும் ஏதாவது உதவி தேவைப்பட்டால் செய்வோம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
ஆட்சி செய்வதில் நாங்கள் விருப்பம்  கொள்ளவில்லை என்றும்,  நிதி சார்ந்து சுதந்திரமாக செயல்பட உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த அறிவிப்பு அந்நாட்டு மக்களுக்கு மட்டுமின்றி அரச குடும்பத்துக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே, பக்கிங்காம் அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கையில், இளவரசர் மற்றும் இளவரசியின் முடிவால் அரச குடும்பம் கவலை அடைந்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இளவரசர் ஹாரி, அமெரிக்க நடிகையான மேகனை காதலித்து திருமணம் செய்து கொண்டதும், அந்த தம்பதிக்கு கடந்த ஆண்டு ஆண் குழந்தை பிறந்ததும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

கொரோனாவால் அமெரிக்காவில் நெருக்கடி - "அடுத்த ஆண்டு 25 லட்சம் வேலை இழப்பு ஏற்படும்"

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் அமெரிக்கா, வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

2 views

வறுமையை மூடி மறைக்கிறதா அமெரிக்கா? - கொரோனாவால் பாடம் படித்த அமெரிக்கா

வல்லரசு நாடான அமெரிக்காவின் வறுமையை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது, கொரோனா....

12 views

கொரோனா வைரஸ் அமெரிக்காவை பதம் பார்ப்பது ஏன்?

கொரோனா வைரஸ் அமெரிக்காவை பதம் பார்த்து வருகிறது. அங்கு நியூயார்க் மாகாணத்தில் மட்டும் 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

21 views

கொரோனாவிற்கு ஆன்டிபாடி பிளாஸ்மா சிகிச்சை - ஜெர்மனி விஞ்ஞானிகள் நம்பிக்கை

கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களிடம் பெறப்படும் ஆன்டிபாடி பிளாஸ்மா மூலம் கொரோனா நோயாளிகளை குணப்படுத்த முடியும் என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

28 views

ஸ்பெயினில் கொரோனாவால் ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 222 பேர் பாதிப்பு

ஸ்பெயினில் ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 222 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு ஊரடங்கு தொடர்கிறது.

31 views

"சீனாவில் கொரோனாவின் இரண்டாம் அலை வீசும் ஆபத்து" - சீன அதிபர் எச்சரிக்கை

சீனாவில் கொரோனாவின் இரண்டாம் அலை வீசும் ஆபத்து இருப்பதாக அந்நாட்டு அதிபர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

164 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.