"சுலைமானியை கொல்ல உத்தரவிட்டவர்கள் பயங்கரவாதிகள்" - ஈரான் நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்

ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்ட நிலையில் அமெரிக்க ராணுவத்தை பயங்கரவாத இயக்கமாக ஈரான் அறிவித்துள்ளது.
சுலைமானியை கொல்ல உத்தரவிட்டவர்கள் பயங்கரவாதிகள் - ஈரான் நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்
x
ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்ட நிலையில் அமெரிக்க ராணுவத்தை பயங்கரவாத இயக்கமாக ஈரான் அறிவித்துள்ளது.அமெரிக்காவை பயங்கரவாத ஆதரவு நாடாக அறிவித்து கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கொண்டு வரப்பட்ட சட்டத்தில் திருத்தம் செய்து, நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா, ஈரான் நாடாளுமன்றத்தில் அமோக ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்த மசோதாவில் அமெரிக்க படைகள், அதனை சார்ந்த அனைத்து அமைப்புகள், ஊழியர்கள், ஒப்பந்தக்காரர்கள் மற்றும் சுலைமானியை கொல்ல உத்தரவிட்டவர்கள் அனைவரும் பயங்கரவாதிகள் என குறிப்பிடப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்