"அமெரிக்காவை தாக்க நினைத்தால் சுலைமானிக்கு நேர்ந்த கதிதான் நடக்கும்" - டிரம்ப்
சுலைமானி விவகாரத்தை தொடர்ந்து அமெரிக்கா சொத்துக்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தினால், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
சுலைமானி விவகாரத்தை தொடர்ந்து அமெரிக்கா சொத்துக்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தினால், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார். அமெரிக்க நிலைகள் மீது தாக்குதல் நடத்தினால் என்ன நடக்கும் என்பதற்கு உதாரணம் தான் சுலைமானி மீதான தாக்குதல் எனவும் அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலுக்கு பழிவாங்க ஈரான் தாக்குதல் நடத்த முற்பட்டால், ஈரானில் உள்ள 52 நிலைகள் மீது உடனடியாகவும், பலமாகவும் சேதம் இருக்கும் வகையில் அமெரிக்காவின் தாக்குதல் இருக்கும் என்று ஈரானுக்கு, டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். சுலைமானி தனது வாழ்க்கையில் கொன்று குவித்தவர்கள் பற்றி தற்போது பட்டியலிட விரும்பவில்லை எனவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
Next Story

