நாளை மறுநாள் இங்கிலாந்து பொதுத் தேர்தல் : கருத்து கணிப்பில் போரிஸ் ஜான்சன் முன்னிலை

இங்கிலாந்து நாடாளுமன்றத்துக்கு திடீர் தேர்தல் நாளை மறுநாள் நடைபெற உள்ள நிலையில், ஜனவரி மாதத்தில் மீண்டும் பிரெக்ஸிட் தொடர்பாக வாக்கெடுப்பு நடைபெறலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாளை மறுநாள் இங்கிலாந்து பொதுத் தேர்தல் : கருத்து கணிப்பில் போரிஸ் ஜான்சன் முன்னிலை
x
ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறும் 'பிரெக்ஸிட்' நடவடிக்கையை செய்து முடிப்பதில் இழுபறி நீடித்து வருகிறது. அக்டோபர் மாதத்துடன் கூட்டமைப்பில் இருந்து வெளியேற வேண்டிய நிலையில், கெடுவை நீட்டிக்க வேண்டும் என, இங்கிலாந்து நாடாளுமன்றம் கோரிக்கை விடுத்திருந்தது. இதனிடையே, பிரதமர் போரிஸ் ஜான்சன் பதவி விலகியதுடன், திடீர் தேர்தல் நடத்தி மக்களின் ஆதரவை பெற தீர்மானித்தார். திடீர் தேர்தலுக்கு எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியும் ஆதரவு அளித்தது. இந்த நிலையில், தேர்தல் கருத்து கணிப்பில் ஆளுங்கட்சிக்கு 42 சதவீத வாக்குகளும், எதிர்கட்சியான தொழிலாளர் கட்சிக்கு 36 சதவீத வாக்குகளும் கிடைக்கும் என கூறப்படுகிறது. தேர்தலுக்கு பின்னர் பிரெக்ஸிட் நடவடிக்கை இருக்கலாம் அல்லது மீண்டும் பொது வாக்கெடுப்பு நடைபெறலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.



Next Story

மேலும் செய்திகள்