அமெரிக்க அதிபர் டிரம்ப்பை பதவி நீக்கும் தீர்மானம் : அனுமதி அளித்தார், நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபை சபாநாயகர்

அமெரிக்க அதிபர் டிரம்பை பதவி நீக்கும் தீர்மானத்துக்கு அந்நாட்டு நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையின் தலைவர் நான்சி பெலோசி அனுமதி அளித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப்பை பதவி நீக்கும் தீர்மானம் : அனுமதி அளித்தார், நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபை சபாநாயகர்
x
அரசியல் எதிரிகளை பழி வாங்குவதற்காக, அதிகார துஷ்பிரயோகம் செய்ததாகவும், உக்ரைன் நாட்டு அதிபருக்கு கடிதம் எழுதியதாகவும் டிரம்ப் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக, அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையை சேர்ந்த உறுப்பினர்கள் விசாரணை நடத்தி வந்தனர். அதில், டிரம்ப் கடிதம் எழுதியது உறுதியான நிலையில், டிரம்புக்கு எதிரான பதவி நீக்க தீர்மானத்துக்கு பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசி அனுமதி அளித்துள்ளார். இந்த சபையில் எதிர்கட்சியான  ஜனநாயக கட்சிக்கே அதிக பலம் என்பதால், தீர்மானம் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும், டிரம்ப் மீதான பதவி நீக்க தீர்மானம் மேலவையான செனட் சபையிலும் விவாதிக்கப்படும். அங்கு, டிரம்பின் கட்சியான குடியரசு கட்சிக்க அதிக பலம் என்பதால், அங்கு தீர்மானம் தோல்வி அடையும் என்பதால், டிரம்ப் பதவிக்கு ஆபத்து இல்லை என எதிர்பார்க்கப்படுகிறது. 
இதற்கிடையே, தீர்மானத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள டிரம்ப், அமெரிக்க அரசியல் சாசனத்தை கேலிக்கூத்தாகும் செயலில் எதிர்க்கட்சியினர் ஈடுபட்டுள்ளதாகவும் செனட் சபையில் தீர்மானத்தை எதிர்கொள்வதாகவுட் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்