அமெரிக்க அதிபர் பதவியை தவறாக பயன்படுத்தியதாக புகார் : டிரம்ப் மீதான புகார் தொடர்பாக 300 பக்க அறிக்கை தாக்கல்

அமெரிக்க அதிபர் டிரம்ப்பை பதவி நீக்கம் செய்வது தொடர்பாக, அமெரிக்க காங்கிரசில் தீர்மானம் எந்த நேரத்திலும் கொண்டு வரப்படலாம் என்ற நிலை உருவாகி உள்ளது.
அமெரிக்க அதிபர் பதவியை தவறாக பயன்படுத்தியதாக புகார் : டிரம்ப் மீதான புகார் தொடர்பாக 300 பக்க அறிக்கை தாக்கல்
x
அமெரிக்க அதிபர் டிரம்ப்பை பதவி நீக்கம் செய்வது தொடர்பாக, அமெரிக்க காங்கிரசில் தீர்மானம் எந்த நேரத்திலும் கொண்டு வரப்படலாம் என்ற நிலை உருவாகி உள்ளது. ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடென் மீது விசாரணை நடத்த உக்ரைன் அரசுக்கு அமெரிக்க அதிபர் என்ற நிலையில் டிரம்ப் அழுத்தம் கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நாடாளுமன்ற விசாரணை புலனாய்வு குழு சம்மன் அனுப்பி நிலையில், ஆஜராக டிரம்ப் மறுத்துவிட்டார். இந்நிலையில், குற்றச்சாட்டு தொடர்பாக 300 பக்க அறிக்கையை நாடாளுமன்ற விசாரணை புலனாய்வுக் குழு, அமெரிக்க காங்கிரசில் தாக்கல் செய்துள்ளது. எந்த நேரத்திலும் பதவி நீக்கத் தீர்மானம் அமெரிக்க காங்கிரசில் கொண்டு வரப்படலாம் என்ற நிலையில், டிரம்ப் மற்றும் அவரின் மனைவி நேற்று அவசர அவசரமாக வாஷிங்டன் திரும்பியுள்ளனர்.  

Next Story

மேலும் செய்திகள்