இங்கிலாந்தில் கட்டு கட்டாக தெருவில் கிடக்கும் பணக்கட்டுகள், எங்கிருந்து வருகிறது பணம் ? - நீடிக்கும் மர்ம கதை

இங்கிலாந்தில் கட்டு கட்டாக தெருவில் கிடக்கும் பணம்... பணத்தின் மீது துளி கூட ஆசையில்லாத மனிதர்கள் என நீடிக்கும் மர்மம் நிறைந்த நேர்மையின் கதை.
இங்கிலாந்தில் கட்டு கட்டாக தெருவில் கிடக்கும் பணக்கட்டுகள், எங்கிருந்து வருகிறது பணம் ? - நீடிக்கும் மர்ம கதை
x
இங்கிலாந்தில் திருட்டு பயமற்ற நேர்மையான இடம் இது தான் என அனைத்து செய்தித்தாள்களிலும் இடம்பெற்றுள்ளது, பிளாக் ஹால் கொல்லிரி என்ற கிராமம்... பல பாலிவுட் படங்களின் படபிடிப்புகளுக்கு பெயர்போனது, இந்த கிராமத்தின் கடற்கரை... இன்று தனது நேர்மையால்  உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஒரு முறையல்ல.. இரு முறையல்ல..  கடந்த ஐந்து ஆண்டுகளில் இதுவரை 14 முறை  இந்திய மதிப்பு படி, தலா ஒரு லட்சத்து 85 ஆயிரம் சாலையில் கிடப்பதும் அதனை பொதுமக்கள் காவல் நிலையத்தில் சென்று ஒப்படைப்பதும் தொடர் கதை... மர்மத்தின் தொடர்ச்சியாக, கடந்த திங்கட் கிழமையும் சாலையில் இதே போல்  ஒரு லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் பணக்கட்டுகள் கண்டெடுக்கப்பட்டு, காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் பணக் கட்டு கண்டெடுக்கப்படுவது இது நான்காவது முறை... இந்த பணம் அனைத்தும் எங்கிருந்து வருகிறது என்பதைக் கண்டறிய பல ஆண்டுகளாக விசாரணை நடந்து வருகிறது... இந்நிலையில், சாமானிய மக்களுக்கு உதவ நவீன காலத்து  ராபின் ஹூட் இவ்வாறு சாலைகளில் பணத்தை பரிசாக போட்டு செல்வதாக சிலர்  நம்புகின்றனர், நீடிக்கும் பண மர்மத்தின் ஆச்சரியங்கள் வெளிச்சத்துக்கு வர  வேண்டும் என பலர் ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கின்றனர்...


Next Story

மேலும் செய்திகள்