"தன் மீதான விசாரணை - அமெரிக்காவிற்கே அவமானம்" - அதிபர் டிரம்ப் கருத்து

தன் மீதான விசாரணை, அமெரிக்காவிற்கே அவமானம் மற்றும் சங்கடம் என டிரம்ப் தெரிவித்தார்.
தன் மீதான விசாரணை - அமெரிக்காவிற்கே அவமானம் - அதிபர் டிரம்ப் கருத்து
x
அமெரிக்க அதிபர் டிரம்ப் உக்ரைன் நாட்டை சேர்ந்த அரசியல் தலைவரான ஜெலன்ஸ்கியுடன் தொலைப்பேசியில் சர்ச்சைக்குரிய உரையாடல் மேற்கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக, எதிர் கட்சியான ஜனநாயக கட்சியை சேர்ந்த எம்பிக்கள் மீது அதிபர் டிரம்ப், கடுமையான விமர்சனத்தை தெரிவித்திருந்தார். இதையடுத்து, டிரம்ப் மீது நாடாளுமன்றத்தில் பதவி நீக்க தீர்மானம் எனப்படும் 'இம்பீச்மெண்ட்' கொண்டு வரப்பட்ட நிலையில், அதன் மீது 6 வாரம் விசாரணை நடைபெறுகிறது. 

இந்நிலையில், அமெரிக்காவின் துணை அதிபர் மைக் பென்சுக்கு நெருக்கமானவராக கருதப்படும் ஜெனிபர் வில்லியம்ஸ், வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள உக்ரைன் நாட்டிற்கான நிபுணர் ஒருவர் என மொத்தம் 4 பேர் டிரம்புக்கு எதிராக நேற்று சாட்சியம் அளித்தனர். இந்நிலையில், இந்த விசாரணை, அமெரிக்காவிற்கே அவமானம் மற்றும் சங்கடம் என டிரம்ப் தெரிவித்தார். இது தொடர்பாக வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அதிபர் டிரம்ப், சாட்சியம் அளித்தவர்கள் குறித்து தாம் கேள்விப்பட்டது கூட இல்லை என்றும் சாட்சியத்தின் உண்மைத்தன்மை குறித்து தீர்மானிக்கும் முடிவை அமெரிக்கர்களிடமே விட்டு விடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்