"ஒசாமா, ஹக்கானி, ஹபீஸ் சயீத் ஆகியோர் எங்கள் ஹீரோ" : பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரப்

முஜாகிதீன் அமைப்புக்கு பயிற்சி அளித்து ஆயுதம் வழங்கினோம் என பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரப் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஒசாமா, ஹக்கானி, ஹபீஸ் சயீத் ஆகியோர் எங்கள் ஹீரோ : பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரப்
x
முஜாகிதீன் அமைப்புக்கு பயிற்சி அளித்து ஆயுதம் வழங்கினோம் என பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரப் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சர்வதேச ஊடகம் ஒன்றில் பேசிய அவர் 1979ஆம் ஆண்டு முதல் சொல்கிறேன் என ஆரம்பித்து பேசுகிறார். அதில் காஷ்மீரில் இருந்து பாகிஸ்தான் வந்தவர்களுக்கு ஆதரவு அளித்து பயிற்சி அளித்தோம் என்றும், ஒசாமா பின்லேடன், ஹக்கானி, ஹபீஸ் சயீத் ஆகியோர் எங்கள் ஹீரோக்கள் என்றும் கூறினார். சூழ்நிலை காரணமாக ஹீரோவாக பார்க்கப்பட்டவர்கள், தற்போது, வில்லன்களாக பார்க்கப்படுகிறார்கள் என பர்வேஷ் முஷாரப் தெரிவித்தார். இந்தியா மீதான தாக்குதலை நடத்தவும், சோவியத்தை வெளியேற்றவும் பயிற்சி அளித்ததாகவும் அவர் கூறியுள்ளது சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.    

Next Story

மேலும் செய்திகள்