ரஷ்யா, சீனா, பிரேசில் அதிபர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு

'பிரிக்ஸ்' மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரேசில் சென்றுள்ள பிரதமர் மோடி, ரஷ்ய, சீன அதிபர்களை தனித்தனியாக சந்தித்து பேசினார்.
ரஷ்யா, சீனா, பிரேசில் அதிபர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு
x
ரஷ்ய அதிபர் விளாமிடிர் புதினுடன் பேசிய பிரதமர் மோடி, இருநாட்டின் பாதுகாப்பு, வர்த்தகம், கலாச்சாரம் ஆகியவை வலுப்படும் என்றார். இதனால், இருநாட்டு மக்களும் பயனடைவார்கள் என்றும், 2025 ஆம் ஆண்டில், 25 பில்லியன் அமெரிக்க டாலர் அளவில் வர்த்தகம் செய்வது குறித்து பேசியதையும் குறிப்பிட்டார்.

சீனா அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்த பிரதமர் மோடி, இருவரும் மாமல்லபுரத்தில் சந்தித்ததை நினைவுகூர்ந்தார். அந்த சந்திப்பு, புதிய உத்வேகத்தை கொடுத்துள்ளதாக மோடி கூறிய நிலையில், அடுத்த ஆண்டில், சீனாவில் நடைபெறவுள்ள 3வது முறைசாரா சந்திப்புக்கு வருமாறு ஜின்பிங் அழைப்பு விடுத்தார். இருநாட்டு எல்லைப் பிரச்சினை, அமைதி, பிராந்திய ரீதியிலான வர்த்தக ஒப்பந்தம் ஆகியவை குறித்தும் அப்போது பேசினர். 

பிரேசில் அதிபர் JAIR BOLSONAROவை சந்தித்த பிரதமர் மோடி, பன்முக ஒத்துழைப்பால், இருநாட்டு மக்களும் அடையும் நன்மைகள் குறித்து பேசினர்.


Next Story

மேலும் செய்திகள்