நவம்பர் 16-ல் இலங்கை அதிபர் தேர்தல் : இறுதிக்கட்ட பிரசாரத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிரம்

இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே மற்றும் சஜித் பிரேமதாசா இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. நாளை​யுடன் பிரசாரம் ஓய உள்ள நிலையில், அங்கு பிரசாரம் தீவிரமடைந்துள்ளது.
நவம்பர் 16-ல் இலங்கை அதிபர் தேர்தல் : இறுதிக்கட்ட பிரசாரத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிரம்
x
இலங்கை அதிபர் தேர்தல் வரும் 16 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் 35 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.  அதிபர் தேர்தலில்  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா கட்சியின் சார்பில் போட்டியிடும்  கோத்தபய ராஜபச்சேவுக்கும், ஐக்கிய தேசிய கட்சியின் சஜித் பிரேமதாசாவுக்கும் இடையே தான் கடும் போட்டி நிலவுகிறது. கோத்பய ராஜபக்சே மற்றும் சஜித் பிரேமதாசா இருவருமே அரசியல் பின்புலம் உள்ள குடும்பத்தில் இருந்து வந்தவர்கள் தான் என்றாலும், இருவரும் அணுகுமுறையும் வேறு வேறுவிதமாக உள்ளது. கோத்தபய ராஜபக்சே இலங்கை இன்று சந்திக்கும் பிரச்சனைகளுக்கு, தீர்வுக்காண அதிபர் ஆட்சி முறையை கையாள நினைப்பதாகவும், தனியார் முதலீடுகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என்று பிரசாரங்களில் கூறி வருவதாகவும் அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். மறுபுறம் சஜித் பிரேமதாசா, ஜனநாயகம் வலுவில்லாமல் போனதே இலங்கை தற்போது சந்தித்து வரும் பிரச்சனைகளுக்கு காரணம் என்றும், அதனை தாம் அதிபராக வந்தால், வலுப்படுத்துவேன் என்றும் பிரசாரத்தில் கூறி வருகிறார். ஒரு கோடியே 60 லட்சம் வாக்காளர்களில் 16 லட்சம் பேர் முதல் முறை வாக்களிக்க உள்ள நிலையில், அவர்களின் வாக்குகளை பெற சஜித் பிரேமதாசா தீவிரமாக முனைப்பு காட்டி வருவதாக கூறப்படுகிறது. சீனா கூட்டாளியாக விரும்புவர்களை தோற்கடியுங்கள் என்ற அளவில் சஜித் பிரேமதாசா பிரச்சாரம் மேற்கொண்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்