சீனாவில் 5ஜி இணைய சேவை துவக்கம்

இணையத்தின் தற்போதைய அதிவேகமாகக் கருதப்படும் 5 ஜி தொழில்நுட்பம் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சீனாவில் 5ஜி இணைய சேவை துவக்கம்
x
இணையத்தின் தற்போதைய அதிவேகமாகக் கருதப்படும் 5 ஜி தொழில்நுட்பம் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சீனா மொபைல்ஸ், சீனா டெலிகாம் மற்றும் சீனா யுனிகாம் ஆகிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளன. பீஜிங், ஷாங்காய் போன்ற முதல் தர நகரங்கள், வூகான், நஞ்சிங் போன்ற இரண்டாம் தர நகரங்கள் என மொத்தம் 50 நகரங்களில் மட்டுமே இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது.  5 ஜி சேவையைப் பெறுவதற்கு ஏற்கனவே ஒரு கோடிக்கும் அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த 5ஜி சேவையை பெற குறைந்தபட்ச மாதக் கட்டணம் இந்திய மதிப்பில் சுமார் ஆயிரத்து 272 ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்