துருக்கி - அமெரிக்கா இடையே புதிய ஒப்பந்தம்- மைக் பென்ஸ், ஏர்டோகன் பேச்சில் முடிவு

துருக்கியின் வடபகுதியில் இருந்து குர்து படைகள் பாதுகாப்பாக வெளியேறும் வகையில், துருக்கி 5 நாள் தாக்குதலை நிறுத்தியுள்ளது. அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் உடனான பேச்சுக்கு பின்னர் துருக்கி அதிபர் ஏர்டோகன் இதனை அறிவித்துள்ளார்.
துருக்கி - அமெரிக்கா இடையே புதிய ஒப்பந்தம்- மைக் பென்ஸ், ஏர்டோகன் பேச்சில் முடிவு
x
சிரியாவில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து துருக்கியின் வடபகுதியில் 35 ஆண்டுகளாக உள்நாட்டு போரில் ஈடுபட்டு வரும் YGP அமைப்பினரை வெளியேற்றும் பணியை துருக்கி ராணுவம் தொடங்கியது. ஒரு வார காலம் நடைபெற்ற தாக்குதலில் 500 பேர் கொல்லப்பட்டதாகவும் 3 லட்சம் பேர் இடம் பெயர்ந்து உள்ளதாகவும் மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன. இதனிடையே இந்த தாக்குதலை உடனடியாக நிறுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் விடுத்த எச்சரிக்கையை துருக்கி அதிபர் ஏர்டோகன் நிராகரித்தார். இந்நிலையில் துருக்கிக்கு ஆயுதம் விற்பனை செய்ய பல ஐரோப்பிய நாடுகள் தடைவிதித்தன. ஒரு கட்டத்தில் பொருளாதார தடை விதிக்கப்படும் என டிரம்ப் எச்சரித்து துருக்கி பணியவில்லை. இந்நிலையில் அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் துருக்கி தலைநகர் அங்காராவில் ஏர்டோகனை சந்தித்து பேசினார். இதனைத் தொடர்ந்து 5 நாட்கள் தாக்குதலை நிறுத்த துருக்கி சம்மதம் தெரிவித்துள்ளது. அதற்குள் பாதுகாப்பு பிராந்தியத்தில் இருந்து குர்து படைகள் வெளியேறி விட வேண்டும் என்றும் இது போர் நிறுத்த ஒப்பந்தம் அல்ல என துரக்கி வெளியுறவுத்துறை அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார். இதனிடையே ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புக்கு எதிராக அமெரிக்க படைக்கு உதவிய குர்து படைகளை தவிக்கவிட்டு, துருப்புக்களை திரும்பப் பெற்ற டிரம்பின் முடிவுக்கு அமெரிக்காவில் பலத்த எதிர்ப்பு எழுந்துள்ளது.  


Next Story

மேலும் செய்திகள்