வேதியியலுக்கான நோபல் பரிசு - ஜப்பான் மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிப்பு

இந்த ஆண்டின் வேதியியலுக்கான நோபல் பரிசு மூன்று விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.
வேதியியலுக்கான நோபல் பரிசு - ஜப்பான் மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிப்பு
x
லித்தியம் அயன் பேட்டரியை உருவாக்க பெரும் பங்காற்றியதற்காக அமெரிக்க விஞ்ஞானிகளான ஜான் குட் எனஃப், ஸ்டான்லி விட்டிங்ஹாமிற்கும், ஜப்பானை சேர்ந்த விஞ்ஞானி  அஹிரா யோஷினி ஆகியோருக்கு நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுகிறது. மிக எடை குறைவான இந்த லித்தியம் அயன் பேட்டரி இன்று மின்னணுவியல் துறையில் பெரும் பங்காற்றி வருகிறது.குறிப்பாக செல்போன்கள், லேப்டாப்கள், மின்னணு இயந்திரங்கள் மற்றும் இதய நோயாளிகளின் உயிர்காக்கும் கருவியான  பேஸ்மேக்கரில் லித்தியம் - அயன் பேட்டரி  பயன்படுத்தப்படுகின்றது.  இதில் நோபல் பரிசு பெறும் 97 வயதான  ஜான் குட் எனஃப், தொடர்ந்து தாம் லித்தியம் அயன் பேட்டரி மேம்ப்பாட்டு திட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்