சீன அதிபர்- பிரதமர் மோடி அக்டோபர் 11-ந்தேதி வருகை : மாமல்லபுரத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பு

சீன அதிபர்- பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு மாமல்லபுரத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
சீன அதிபர்- பிரதமர் மோடி அக்டோபர் 11-ந்தேதி வருகை : மாமல்லபுரத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பு
x
சர்வதேச சுற்றுலா மையமான மாமல்லபுரத்திற்கு  அக்டோபர் 11-ந்தேதி  சீன பிரதமர் ஜின்பிங் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி வருகை தர உள்ளனர். இரண்டு நாட்கள் சந்தித்து பேசும் இருநாட்டு தலைவர்களும் , யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட மாமல்லபுரம் கடற்கரை கோயில், ஐந்துரதம், அர்ச்சுணன் தபசு ஆகிய பாரம்பரிய நினைவு சின்னங்களை சுற்றிப் பார்க்க உள்ளனர். இதையொட்டி மாமல்லபுரத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர். 

மாமல்லபுரத்தில்  தங்கி உள்ள வெளிநாட்டு பயணிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் குறித்து அங்குள்ள தங்கும் விடுதிகள், ஓட்டல்கள், கேளிக்கை விடுதிகள், ரிசார்ட்டுகள் ஆகியவற்றின் நிர்வாகிகளுடன் போலீசார் ஆலோசனை நடத்தினர். மாமல்லபுரத்தில் தங்கி உள்ள இலங்கை, திபெத் நாட்டினரின் முழு விவரங்களை காவல் நிலையத்தில் தெரிவிக்க வேண்டும் என்று போலீசார் கேட்டு கொண்டனர். வெளிநாட்டு சுற்றுலா  பயணிகளின் பாஸ்போர்ட், விசா மற்றும் அவர்கள் குறித்த முழு விவரங்களை மாமல்லபுரம் காவல் நிலையத்தில் எழுத்து பூர்வமாக தெரிவிக்க வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்